Chennai: சாப்பிட்ட எச்சில் எலும்பை பொறுக்கி மீண்டும் சுட சுட சூப்! ஷாக் கொடுத்த தள்ளுவண்டிக்காரர்!!
சென்னையில் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகள் மூலம் சூப் வைக்கும் கடைக்காரர்.
சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் சூப் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்ட கீழே போட்ட எலும்புகளை மீண்டும் சூப் போட பயன்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக உணவு கடைகள் அதிகரித்துள்ளன. ஒரு தெருவில் ஒரு கடைகள் இருந்த காலம்போய், தற்போது, அதிக கடைகள் வந்துவிட்டன. இந்த கடைகளில் எல்லாம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்று சாப்பிடுகின்றனர். அவசரமாக செல்வோர்கள், அதிக பணம் கொடுத்து பெரிய ஹோட்டல்களில் சாப்பிட முடியாதவர்கள் சாலைகளில் இருக்கும் தள்ளுவண்டியில் தங்களின் வயிற்றை நிரப்பி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நிலைமை அப்படியிருக்கிறது. நல்ல உணவை தான் சாப்பிடுகிறோம் என்று நினைத்து பார்க்கக் கூட நேரமில்லாமல் இருக்கும் அவர்களுக்கு ஏமாற்றாமல் நல்ல உணவை கொடுப்பதே, ஆனால், சிலர் கடைக்காரர்கள் யார் எப்படி போனால் என்ன..?. லாபம்தான் முக்கியம் என்ற நோக்கில் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் உணவை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர். அதுபோன்ற சம்பவம் தற்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் நடைமேம்பாலம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு சூப் குடிக்கும் வாடிக்கையாளர்கள் சூப் குடிக்கும்போது, அதனுள் இருக்கும் எலும்பு துண்டுகளை கீழே போடுகின்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து கீழே இருக்கும் எலும்பு தூண்டுகளை ஆள் இல்லாத நேரம் பார்த்து, சூப் கடைக்காரர் கீழே இருந்து எடுத்துவிட்டு தண்ணீர் கழுவி மீண்டும் சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்கிறார். இந்தக் காட்சிகள் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்