குளிர்பானத்தில் மயக்க மருந்து.. பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார்.. உடந்தை மனைவியும் கைது!
செங்குன்றம் ஆசிரமத்தில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் பகுதியை அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் 48 வயதான சங்கரநாராயனன். இவர் புழல் விநாயகரம் சூரப்பட்டு சாலை அருகே ஆசிரமம் ஒன்றை நடத்தி சாமியாராகவும் இருந்து வருகிறது. இவருக்கு உறுதுணையாக அந்த ஆசிரமத்தில் இவரின் 43 வயதான மனைவி புஷ்பலதா இருந்துள்ளார்.
இந்த ஆசிரமத்திற்கு கொளத்தூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் தான் பிளஸ்-2 படிக்கும்போது தனது தாயாருடன் இந்த ஆசிரமத்துக்கு வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சாமியார் சங்கரநாராயணனுடன் இளம்பெண்ணிற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இளம்பெண் ஆசிரமத்திற்கு வந்துசெல்ல, ஒரு கட்டத்தில் சாமியார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சாமியாரின் இந்த கொடூர செயலுக்கு அவரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
கடந்த 2018 ம் ஆண்டு அந்தபெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணமானதும் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலைக்கு சென்றுள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட சாமியார் சங்கரநாராயணன், மீண்டும் பெண்ணை ஆசிரமத்துக்கு அழைத்து தன் ஆசைக்கு இணங்காவிட்டால் உனது அந்தரங்க படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் படிக்க : மீண்டும் "கனா காணும் காலங்கள்"... எல்லையில்லா மகிழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!
இதனால் கர்ப்படைந்த அந்த இளம்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளார். குழந்தை பெற்ற பிறகும் சாமியார் தொடர்ச்சியாக அந்த பெண்ணுக்கு போன் செய்து, தன்னுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண், தனக்கு நடந்த கொடுமை குறித்து மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் கண்ணகி, சாமியார் சங்கரநாராயணன் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மனைவி புஷ்பலதா ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
''அணுகுமுறை ஓகே... ஆனா சண்டை போடுறார்'' - கோலி குறித்த கேள்விக்கு பட்டென பதிலளித்த கங்குலி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்