''அணுகுமுறை ஓகே... ஆனா சண்டை போடுறார்'' - கோலி குறித்த கேள்விக்கு பட்டென பதிலளித்த கங்குலி!
எனக்கு விராட் கோலியின் அணுகுமுறை பிடிக்கும், எந்தவொரு விஷயத்திலும் மிகவும் போராடி முயற்சி செய்வார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கோலியின் அணுகுமுறை குறித்து விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில், கேப்டன்சி பிரச்னைகள் குறித்து சில சர்ச்சைகள் கிளம்பியது. அதில், கோலி டி 20 ஐ கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று போர்டு உறுப்பினர்கள் எவரும் சொல்லவில்லை என்று கூறினார்.
My communication with BCCI hasn't happened & I wanted to rest. I was contacted 1.5 hours before the meeting. There was no communication. Chief selector discussed the Test team. The 5 selectors told me I will not be ODI captain. Which is fine: Virat Kohli replies to ANI ques pic.twitter.com/bDdgFKAfh6
— ANI (@ANI) December 15, 2021
ஆனால், கங்குலி சார்பில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகவே வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, விராட் கோலி கருத்திற்கும், பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்திற்கும் முரண்பாடு உள்ளதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும், கோலி மற்றும் கங்குலி ரசிகர்கள் தங்கள் ஆதரவு இவர்களுக்கே என்று ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தநிலையில், குர்கானில் நடந்த ஒரு நிகழ்வில் கோலியின் அணுகுமுறை குறித்து கங்குலி பேசியுள்ளார்.
கங்குலியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியில் எந்த வீரரின் மனோபாவம் உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எனக்கு விராட் கோலியின் அணுகுமுறை பிடிக்கும் ஆனால் அவர் நிறைய சண்டையிடுகிறார்’’ என்றார்.
எப்படி நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வியும் கங்குலியிடம் எழுப்பப்பட்டது. இதற்கு ஒரு கிண்டலான பதிலை தந்த கங்குலி, “வாழ்க்கையில் யாருக்கும் எந்த மன அழுத்தமும் இல்லை. மனைவியும் காதலியும்தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய மன அழுத்தம் என்று தெரிவித்தார்.
Thank you for all the memories and the amazing journey we've had as a team with you all. Your contribution has been immense and will always be remembered in Indian cricket history. Wish you the best moving forward in life. Until next time ⭐🤝 pic.twitter.com/42hx4Q7cfq
— Virat Kohli (@imVkohli) November 10, 2021
முன்னதாக, இந்தியாவின் முழுநேர ஒயிட்-பால் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பாக, விராட் கோலியிடம் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் வேண்டாம் என்று கேட்டு கொண்டோம். ஆனால், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. டி 20 மற்றும் ஒருநாள் என இரண்டு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதை தேர்வாளர்கள் சரியாக உணரவில்லை. அதனால் தான் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தோம் ”என்று பிசிசிஐ தலைவர் கூறினார்.
தொடர்ந்து, கோலியின் கருத்தும் உங்களது கருத்தும் முரண்பட்டு இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி கங்குலியிடம் எழுப்பியபோது “இதை பெரிய பிரச்சனையாக எடுத்துச் செல்ல வேண்டாம், நான் எதுவும் சொல்ல முடியாது. இது பிசிசிஐயின் விஷயம், அவர்கள் அதை சமாளிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்