Chennai Rains: மீண்டும் ஆரம்பிக்கலாமா? சென்னையில் வேலையை தொடங்கிய மழை.... எந்தெந்த ஏரியா தெரியுமா?
மேலும் நேற்று முன் தினம் தொடங்கி இடைவிடாமல் பெய்து வந்த மழை இன்று மதிய வேளையில் சற்று ஓய்ந்திருந்தது. தற்போது மீண்டும் சென்னையின் பல பகுதிகளிலும் மழை பரவலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓரிரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கடந்த ஓரிரு தினங்களாக சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மிரட்டி வரும் நிலையில், இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வந்தது. மேலும் நேற்று முன் தினம் தொடங்கி இடைவிடாமல் பெய்து வந்த மழை இன்று மதிய வேளையில் சற்று ஓய்ந்திருந்தது .இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையின் பல பகுதிகளிலும் மழை பரவலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக சென்னையில் நுங்கம்பாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், ஏர்போர்ட், வளசரவாக்கம், போரூர் ஆகிய பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுமுறை :
கடும் மழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை கருத்தில் கொண்டு பணிக்கு செல்வோர்கள் குடை மற்றும் மழை உடை ஆகியவற்றுடன் ஆயத்த நிலையில் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக, நேற்று முன்தினம் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர். மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணிகளை மேற்கொண்டு தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கவனத்திற்கு :
மழைக்காலத்திற்கான அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகள்
~ மின் கம்பிகளைத் தொடாதே. ...
~ மழையில் நடப்பதை தவிர்க்கவும். ...
~ கொசுக்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். ...
~ மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை ஓட்டுங்கள். ...
~ இடி புயலின் போது எலக்ட்ரானிக் சாதனங்களை துண்டிக்கவும்...
~ ஒரு குடை மற்றும் ரெயின்கோட் கையில் வைத்திருங்கள். ...
~ அவசரகாலப் பெட்டியைத் தயாரிக்கவும்.
கனமழை மற்றும் இடியின் போது மரத்தடியில் நிற்க வேண்டாம்...
~ தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள் மற்றும் அறிமுகமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்...
~ உபகரணங்கள் மற்றும் கியர்களின் சரியான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்தவும்..
அவசர சேவைகள்
1. ஆம்புலன்ஸ்- 108/102
2. தீயணைப்பு சேவை- 101
3. போலீஸ்- 100