![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chennai Rains: சென்னையில் பலத்த காற்றுடன் திடீர் கனமழை..!
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வெயிலால் வாடி வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை இதமானதாக அமைந்துள்ளது.
![Chennai Rains: சென்னையில் பலத்த காற்றுடன் திடீர் கனமழை..! Chennai Rains Heavy Rain Lashes Chennai with thunderstorm temperature drops Happy News for Chennai Chennai Rains: சென்னையில் பலத்த காற்றுடன் திடீர் கனமழை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/a95eea82f0f549b3c3515494bfbccb65_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில். நேற்று காலை ஓரளவு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், இன்று இரவு சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளிலும் கருமேகம் சூழ்ந்தது. பலத்த காற்று வீசியது.
இதையடுத்து, தற்போது சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி. கொளத்தூர், கொரட்டூர். வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, ஆலந்தூர் என பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்களாக வெயிலில் வாடி வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை இதமாக அமைந்துள்ளது. அதேசமயம், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)