Chennai Rains: சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.... இன்னும் எவ்வளவு நேரம் தெரியுமா?
இந்த கனமழை அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தொடரும் என்றும், நாளை காலை வரை மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Isolated moderate #Rains happening in few parts of #Chennai. Mostly places in the northern parts of the city getting rains. #COMK pic.twitter.com/fvSymhqPa6
— Chennai Rains (COMK) (@ChennaiRains) October 8, 2022
குறிப்பாக சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
Heavy rain #chennai pic.twitter.com/Q0m0gNPsq3
— நிதன் சிற்றரசு (@srinileaks) October 8, 2022
இந்த கனமழை அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தொடரும் என்றும், நாளை காலை வரை மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rain started few places of Chennai. on and off rain continue till morning. enjoy north east monsoon like conditions. #ChennaiRain #chennairains pic.twitter.com/PDOBlzORV8
— abraham weather (@abraham01679523) October 8, 2022
சென்னையில் மழை:
கடந்த வாரம் முதலே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளது. சாலையில் போகும்போது வாகனஓட்டிகள் கவனமாக செல்லவும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
08.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, மயிலாடுதுறை,அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், , காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.10.2022 மற்றும் 09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.10.2022 மற்றும் 09.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
08.10.2022 முதல் 09.10.2022 வரை : குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.10.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.