Today Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
சென்னையில் இன்று கீழ்ப்பாக்கம், திருவான்மியூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் மின்பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
![Today Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம் உள்ளே..! chennai powercut today on 17th august 2022 poonamalle, thiruvanmiyur Today Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/9c6911c35576cad6fe8b76314959e04c1663378823100102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் அந்தந்த பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
சென்னையில் இன்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையம், திருவான்மியூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் :
பூந்தமல்லி பிரதான சாலை, சாஸ்திரி நகர், ஒழங்குளம், தம்புசாமி தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, நேரு பார்க் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
திருவான்மியூர் :
கொட்டிவாக்கம், ராமலிங்கா நகர், இளங்கோ நகர், ஓ.எம்.ஆர். ஐஸ்வர்யா மருத்துவமனை,
பூந்தமல்லி :
மகண்டு – குன்றத்தூர் சாலை, எம்.ஜி.ஆர். நகர், பூஞ்சோலைவீதி, காமராஜ் நகர், பூந்தமல்லி ட்ரங்க் சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, ராமனுஜகூடம் தெரு, கங்கா சாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்வதும், மின் தொடர்பான பணிகளை விரைந்து முடிப்பதும் சிரமத்தை தவிர்க்க உதவும்.
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)