Chennai Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின் தடை; தெரியுமா? இதைப் படிங்க!
Chennai Powercut: தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படும்.
சென்னையில் இன்று (டிசம்பர் 17 2022) தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் இன்று தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
தாம்பரம்
தாம்பரம் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தலபாக்கம் ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, TNHB காலனி, ராயல் கார்டன், வெங்கடேஸ்வரா நகர், அண்ணாசாலை, வேளச்சேரி பிரதான சாலை, பாலாஜி நகர், மாடம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
ஆவடி பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் சிடிஎச் சாலை, ஐயப்பன் நகர், தந்துறை, ராஜீவ் காந்தி நகர், சத்திரம், காந்தி நகர், பட்டாபிராம் முழுப் பகுதி, விஜிஎன் நகர் முழுப் பகுதி, மாடர்ன்சிட்டி, சிரஞ்சீவி நகர், டிரைவர்ஸ் காலனி, கண்ணப்பாளையம், லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.