Chennai Power Shutdown: சென்னை மக்களே அலர்ட்.. நாளை(26.06.25) இந்த பகுதிகளில் தான் மின் தடை.. முழு விவரம்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(26.06.25) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 26.06.2025
இந்நிலையில், நாளை(26.06.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வியாழக்கிழமை (26.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
குரோம்பேட்டை: நாகல்கேணி, குரோம்பேட்டை பகுதி, லட்சுமிபுரம், குமாரசாமி ஆச்சாரி தெரு, டேங்க் தெரு, சௌந்தரம்மாள் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ஸ்ரீபுரம் 1வது தெரு, ஸ்ரீபுரம் 2வது தெரு, சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர்.
சாஸ்திரி நகர்: கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பாரதிதாசன் தெரு, இசிஆர் பகுதி, லலிதா கார்டன், குப்பம் கடற்கரை சாலை ஒரு பகுதி, வடமாடை தெரு, மேற்கு தொட்டி தெரு, சன்னதி தெரு, மேட்டு தெரு.
முடிச்சூர்: முடிச்சூர் பிரதான சாலை, ஸ்ரீராம் நகர், இந்திரா காந்தி சாலை, கேவிடி கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு மற்றும் பார்வதி நகர்.
இரும்புலியூர்: வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேந்திர நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனா நகர், எம்இஎஸ் ரோடு, சக்கரவர்த்தி தெரு, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, நால்வர் தெரு.
சிட்லபாக்கம்: மேத்தா நகர், பாபு தெரு, திருமகள் நகர், குண்டலகேசி தெரு, சிலப்பதிகாரம் தெரு, சிட்லபாக்கம் மெயின் ரோடு.
பெருங்களத்தூர்: சத்தியமூர்த்தி தெரு, தங்கராஜ் நகர், அமுதம் நகர், கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ மற்றும் சடகோபன் நகர்.
கடப்பேரி: ஜிஎஸ்டி சாலை சித்த மருத்துவமனை, சுகாதார நிலையம், டிடபிள்யூஏடி நீர் வாரியம் மற்றும் ஸ்டேஷன் பார்டர் சாலை.
தாம்பரம்: நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் ரோடு (முடிச்சூர் பாலம்), படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (எரும்பிலியூர்) & மங்களபுரம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















