![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Power Cut: காதலர் தினத்தில் கட் ஆகப்போகும் கரண்ட்... எந்தெந்த இடங்கள் தெரியுமா?
பராமரிப்பு பணி காரணமாக காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி பல இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
![Power Cut: காதலர் தினத்தில் கட் ஆகப்போகும் கரண்ட்... எந்தெந்த இடங்கள் தெரியுமா? Chennai power cut february 14 shutdown areas tambaram guindy and ambattur announced tamilnadu electricity board Power Cut: காதலர் தினத்தில் கட் ஆகப்போகும் கரண்ட்... எந்தெந்த இடங்கள் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/a6ef96fa7ea02d25b5d1b338bd7ce8061676260770892571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் நாளை (பிப்ரவரி 14) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். அந்த வகையில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய் கிழமை (14.02.2023) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கிண்டி:
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வாணுவம் பேட்டை, சாந்தி நகர், புழுதிவாக்கம், ஏஜிஎஸ் காலணி.
தாம்பரம் - பல்லாவரம்
பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனை சாவடி, லட்சுமணன் நகர், சுபம் நகர் மற்றும் திரிசூலம்
அம்பத்தூர்:
அமபத்தூர் தொழிற்பேட்டை, மேட்டுத் தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. வளாகம்
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் சில மாதங்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (09.02.2023) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், முன்னெச்சரிக்கையாக தங்கள் வேலைகளை முடித்து கொள்ளுங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)