Chennai Power Cut: சென்னையில செப்டம்பர் 22-ம் தேதி எந்தெந்த பகுதிகள்ல மின்சாரம் இருக்காதுன்னு தெரியுமா.?
Chennai Power Cut(22-09-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 22-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போரூர்
- மங்களா நகர்
- சக்தி நகர்
- மவுண்ட் பூந்தமல்லி ரோடு
- காவியா கார்டன்
- கணேஷ் அவென்யூ
கோயம்பேடு மார்க்கெட்
- சீனிவாச நகர்
- பக்தவச்சலம் சாலை
- சேமத்தமன் நகர்
- இடார் சாலை
- மேட்டுக்குளம்
- நியூ காலனி
- திருவீதி அம்மன் கோயில் தெரு
- சின்மயா நகர்
- நெற்குன்றம்
- ஆழ்வார் திருநகர்
- மூகாம்பிகா நகர்
- அழகம்மாள் நகர்
- கிருஷ்ணா நகர்
- புவனேஸ்வர் நகர்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















