Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 16-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
Chennai Power Cut(16-10-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 16-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர்
டி.வி.எஸ்.நகர் முழுப் பகுதி, கண்டிகை தெரு, அன்னை நகர் மெயின் ரோடு, பத்மாவதி நகர், அன்பு நகர், சந்தோஷ் நகர், மோகன் கார்டன், தண்ணீர் கால்வாய் சாலை, பல்லா தெரு.
அண்ணாநகர்
ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.
தில்லை கங்கா நகர்
வாஞ்சிநாதன் தெரு மற்றும் விரிவாக்கம், உத்தமர் காந்தி தெரு, திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் தெரு, நேதாஜி தெரு, கேசரி நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 7-வது தெரு, சுரேந்திரா நகர் 6-வது தெரு முதல் 11-வது தெரு வரை மற்றும் விரிவாக்கம், பாரத் நகர், யமுனா தெரு, காவேரி தெரு, தென்பெண்ணை தெரு, தாகூர் தெரு, வால்மீகி தெரு, இளங்கோ தெரு, நேரு தெரு, கிருஷ்ணா தெரு, விவேகானந்தா தெரு, இன்கம்டேக்ஸ் காலனி 1-வது தெரு, பாலாஜி நகர் 1-வது தெரு, சாந்தி நகர், டிஆர்ஏ அஸ்கோட் மற்றும் கேஜி பினாக்கிள்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















