Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 13-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
Chennai Power Cut(13-08-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 13-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடையாறு
3-வது, 4-வது பிரதான சாலை காந்தி நகர், 2-வது கிரசண்ட் பார்க் சாலை.
கொட்டிவாக்கம்
ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், நியூ பீச் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6-வது தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59-வது தெரு, பகத்சிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21-வது தெரு, புதிய காலனி 1 முதல் 4-வது தெரு வரை, கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோவில் தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, மருதீஸ்வரா கோவில், கசூரா கார்டன், பல்கலை நகர், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யூ 1 முதல் 4-வது தெரு வரை, சீவர்ட் ரோடு, பாலகிருஷ்ணா ஹை ரோடு, வால்மீகி நகர், கலாசேத்ரா ரோடு, சிஜிஐ காலனி, போலீஸ் குவார்ட்டர்ஸ், திருவீதியம்மன் கோவில் தெரு, காமராஜ காலனி, காமராஜ காலனி, கந்தசாமி நகர், பாலவாக்கம்.
திருமுல்லைவாயல்
லட்சுமிபுரம், பெரியார் நகர், கோணிமேடு, கங்கை நகர், சரத்கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன்பேட்டை, ஏரங்குப்பம்.
பஞ்செட்டி
கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, பனப்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், சின்னம்பேடு, கரணி, புதுவாயல், ராளபாடி மங்கலம்.
பெரம்பூர்
ஹைரோடு, 1-வது மற்றும் 2-வது தெரு, மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலை 1 முதல் 5 தெரு, தேசியா காலனி, ஹவுசிங் போர்டு, சிஒய்எஸ் சாலை, செம்மாத்தமன் காலனி, மேட்டுப்பாளையம், சாந்தி காலனி, பிஎச் சாலை, நியூ ஃபெரன்ஸ் சாலை, ஸ்ட்ரஹான்ஸ் சாலை, தர்கா தெரு, பென்ஷனர்ஸ் லேன், அப்பா சாமி தெரு, யாகூப் கார்டன் தெரு, அலெக்சாண்டர் கார்டன் தெரு, எஸ்எம்எஸ் தெரு, நார்த் டவுன் 1, 2, பெரம்பூர் பேரக் சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ், ஹண்டர்ஸ் சாலை, ஹண்ட்டர்ஸ் லேன், ரங்கையா தெரு, ராகவன் தெரு, அஸ்தபுஜம் சாலை, கே.எம் கார்டன், நம்மாழ்வார் தெரு, மாணிக்கம் தெரு, முருகேச முதலி தெரு, நரசிம்ம பெருமாள் கோயில் தெரு, காளத்தியப்ப தெரு, தானா தெரு, முத்தையா நாயக்கன் தெரு, அரசப்பன் தெரு, பெருமாள் தெரு, கரியப்பா தெரு, டிமெல்லோஸ் சாலை, ராஜா ஷைப் தெரு, சின்ன தம்பி மசுதி தெரு, கார்ப்பரேஷன் லேன் சிவராவ் சாலை, வல்லம் பங்காரு தெரு, குட்டி தெரு, முத்து நாய்க்கன் தெரு, வெங்கடேச பக்தன் தெரு, சிஎஸ் நகர், சிஆர் கார்டன், சூரத் பவன் தெரு, எத்திராஜ் கார்டன், ராமானுஜம் கார்டன், தியாகப முதலி தெரு, பாபு தெரு, பேரக்ஸ் கேட் தெரு, நைனியப்பன் தெரு, எஸ்எஸ் புரம் ஏ மற்றும் பி பிளாக், பிரிக்லின் சாலை, காமராஜ் தெரு, நக்கீரன் தெரு, திரு.வி.க தெரு, கே.எல்.பி.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















