புதிய ஹுண்டாய் பேயோன் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hyundai Bayon: ஃப்ராங்க்ஸ் தான் போட்டியே..! ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் க்ராஸ்-ஓவர், ஹைப்ரிட்.. ரூ.7 லட்சமே
Hyundai Bayon 2026 Vs Fronx: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதியின் ஃப்ராங்க்ஸ் காருக்கு போட்டியாக, ஹுண்டாயின் பேயோன் வெறும் ரூ.7 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Hyundai Bayon 2026 Vs Fronx: மாருதியின் ஃப்ராங்க்ஸ் காருக்கு போட்டியாக ஹுண்டாயின் பேயோன் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.
ஃப்ராங்க்ஸிற்கு போட்டியாக பேயோன்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரே ஒரு பிரிவில் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதிய கார்களின் அறிமுகம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. காம்பேக்ட் க்ராஸ் ஓவர் மற்றும் சப்-4 மீட்டர் எஸ்யுவி செக்மெண்டானது மிகவும் போட்டியாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அதில் மாருதியின் ஃப்ராங்க்ஸ் கார் மாடல் விற்பனையில் அசத்தி கவனத்தை ஈர்க்கிறது. மாருதி நிறுவனம் தரப்பில் நெக்சா எஸ்யுவி பிரிவில் 40 ஆயிரம் யூனிட்களை கடந்த முதல் மாடலாகவும் இந்த கார் விளங்குகிறது. இந்நிலையில் இதற்கு போட்டியாக கூட்ட நெரிசல் நிறைந்த இந்த பிரிவில் தனது புதிய க்ராஸ் ஓவர் கார் மாடலை களமிறக்க ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் புதிய காரானது எக்ஸ்டெர் மற்றும் வென்யுவிற்கு இடையே நிலைநிறுத்தப்பட உள்ளதாம். விவாதிக்கப்படும் இந்த காரானது புதிய தலைமுறை பேயோன் என கூறப்படுகிறது. இது நேரடியாக மாருதியின் ஃப்ராங்க்ஸ் உடன் சந்தையில் போட்டியிட உள்ளது.
ஹுண்டாய் பேயோனுக்கான காரணம்:
ஸ்டைலான டிசைன் மற்றும் கூபே மாதிரியான எஸ்யுவி தோற்றம் காரணமாக வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து, ஃப்ராங்க்ஸ் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே அந்த பிரிவில் தங்களுக்கான வாய்ப்புகளை தவறவிட ஹுண்டாய் தயாராக இல்லை. உள்நாட்டு சந்தையில் விற்பனையை அதிகரிக்க, ஃப்ராங்க்ஸ் இடம்பெற்றுள்ள பிரிவில் ஒரு வலுவான போட்டியாளரை இறக்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளது. இதன் காரணமாக புதிய க்ராஸ் ஓவர் மாடலில் தீவிரம் காட்டி வரும் நிறுவனம், அதற்கு BC4i CUV எனும் கோட்நேமை கொண்டுள்ளதாம். 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டு இந்த காரானது B-செக்மெண்ட் வரி தள்ளுபடியையும் வழங்குமாம்.

ஹுண்டாய் பேயோன் - ஸ்பை இமேஜ்
புதிய பேயோன் தென்கொரியாவில் சாலை பரிசோதனையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டு இருந்தாலும், டிசைன் தொடர்பான பல அம்சங்களை எளிதாக அறியமுடிகிறது. தற்போதைய தலைமுறை பேயோனானது 4180 மில்லி மீட்டர் நீளம் கொண்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு தயாராகி வரும் மாடல் சப்-4 மீட்டரில் அடங்குமாம். அளவீடுகளை ஒப்பீடு செய்தால் இது மிகுந்த காம்பேக்ட் மாடலாக இருக்கும் என்றும், தோற்ற அடிப்படையில் மிகுந்த எஸ்யுவி ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய தலைமுறை ஐ20 மற்றும் ஏற்கனவே விற்பனையில் உள்ள பேயோனின் கோட்நேம் BC3 என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், புதிய மாடல் BC4i என்ற கோட்நேமை கொண்டிருப்பதால், புதிய ப்ளாட்ஃபார்ம் மற்றும் அப்க்ரேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுண்டாய் பேயோன் - வடிவமைப்பு
தற்போதைய பேயோனானது ஜாக்ட்-அப் ஹேட்ச்பேக் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அந்த அடையாளத்தை புதிய தலைமுறை மூலம் மாற்ற ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புதிய பேயோன் மாடலானது மிகுந்த பாக்ஸி மற்றும் கட்டுமஸ்தான தோற்றத்தை கொண்டிருப்பதை தெளிவாக உணர்த்துகின்றன. முன்புறத்தில் ஸ்போர்ட்டி க்ரில், வென்யுவில் இருப்பதை போன்ற பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், ஸ்ப்லிட் முகப்பு விளக்கு செட்-அப் மற்றும் கனெக்டட் செட்-அப் ஆகியவற்றை கொண்டுள்ளது. உயர்த்தப்பட்ட க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஷோல்டர் லைன் ஸ்வீப்பிங் டிசைன், கூபே ஸ்டைல் ரூஃப்லைன் ஆகியவை ஃப்ராங்க்ஸை காட்டிலும் பேயோனிற்கு அதிக எஸ்யுவி வடிவத்தை தருகிறது.

ஹுண்டாய் பேயோன் - உட்புற வசதிகள், அம்சங்கள்
உட்புற அம்சங்களை கவனத்தில் கொண்டால், புதிய ஹுண்டாய் பேயோனின் கேபின் ஆனது பெரும்பாலும் புதிய தலைமுறை வென்யுவை அப்படியே பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிடம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே என டூயல் ஸ்க்ரீன் செட்-அப்பை கொண்டிருக்கக் கூடும். இடம்பெற உள்ள அம்சங்களின் பட்டியலும் பெரிதாக நீளும் என கூறப்படுகிறது. அதில் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிகல்லி அட்ஜெஸ்டபள் ட்ரைவர் சீர், ADAS தொழில்நுட்பம், 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், 4 ஸ்போக் மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல் மற்றும் எலெக்ட்ரிக் ORVM-கள் இந்த காரை பிரிவின் வலுவான போட்டியாளர்களாக மாற்றுகிறது.
ஹுண்டாய் பேயோன் - இன்ஜின் ஆப்ஷன்கள்
புதிய பேயோனில் இடம்பெற்றுள்ள இன்ஜின் ஆப்ஷன்களும் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளன. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன் வழங்கப்படுமாம். கூடுதலாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினிலும் ஹுண்டாய் பணியாற்றி வருகிறதாம். இது ஹைப்ரிட் மாடலுக்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்படுகிறதாம். காலப்போக்கில் இந்த ஆப்ஷனும் புதிய பேயோனில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. எதிர்காலத்திற்கு ஏற்ப இந்த காரை உருவாக்குவது, ஃப்ராங்க்ஸின் ஹைப்ரிட் மாடல் மீது மாருதி பணியாற்றி வருவதற்கு ஈடானதாக கருதப்படுகிறது.

ஹுண்டாய் பேயோன் - வெளியீடு, விலை..
புதிய தலைமுறை பேயோனின் இந்திய வெளியீட்டிற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தையில் மாருதி ஃப்ராங்க்ஸ் மாடலை தாண்டி நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் கியா சோனெட் ஆகிய மாடல்களிடமிருந்தும் பேயோன் போட்டியை எதிர்கொள்ளும். இந்திய மதிப்பில் இந்த காரின் விலையானது 7 லட்சம் முதல் 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
Frequently Asked Questions
புதிய ஹுண்டாய் பேயோன் எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்?
ஹுண்டாய் பேயோன் எந்த காருக்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?
ஹுண்டாய் பேயோன் மாருதி ஃப்ராங்க்ஸ் காருக்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய ஹுண்டாய் பேயோனின் வடிவமைப்பு எப்படி இருக்கும்?
புதிய பேயோன் பாக்ஸி மற்றும் கட்டுமஸ்தான தோற்றத்துடன், ஸ்போர்ட்டி கிரில், பகல் நேர எல்இடி விளக்குகள், மற்றும் கூபே ஸ்டைல் ரூஃப்லைன் கொண்டிருக்கும்.
ஹுண்டாய் பேயோனில் என்னென்ன இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும்?
புதிய பேயோனில் 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
ட்ரெண்டிங் செய்திகள்























