Chennai Power Shutdown: சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
Chennai Power Cut(11-11-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், நவம்பர் 11-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்லாவரம்
கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜமீன் பல்லாவரம், நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி ஹை ரோடு, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், அஞ்சலக நகர், ஏ.ஜி.எஸ் காலனி, ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், சோமு நகர். புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர் பகுதி, பஜனை கோயில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை.
எழும்பூர்
சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி. ரோடு, ஹண்ட்டர்ஸ் ரோடு, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன்குளம், சுப்பாஹா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், அப்பாராவ் கார்டன், பெரியதம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, அனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி. பார்க், பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ராட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு, அஸ்தபுஜம் சாலை, ராகவா தெரு.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















