சென்னை கொடுங்கையூரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! குடிபோதையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
கடைக்குச் சென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போதை ஆசாமி கைது

சென்னை கொடுங்கையூரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! குடிபோதையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 12 வயதில் சிறுமி உள்ளது. 12 வயது சிறுமி தனது வீட்டில் அதே தெருவில் உள்ள மளிகை கடைக்கு சென்று முட்டை வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு குடி போதையில் இருந்த நபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து கட்டிப் பிடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அந்த நபரை அடித்து சிறுமியை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து எம்.கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவித்து பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 40) என்பதும் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் குடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மூன்று கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 43 லட்ச ரூபாய் ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு. திரு.வி.க நகர் போலீசார் விசாரணை
சென்னை பெரம்பூர் ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி புருஷோத்தமன் ( வயது 40 ) இவர் சொந்தமாக ஹாலிடே ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது தொழில் அபிவிருத்திக்காக பணம் தேவைப்பட்டதால் தனியார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரை தொடர்பு கொண்டு தொழிலை மேலும் விரிவுபடுத்த மூன்று கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று தரும் படி கூறியுள்ளார். ஆனந்தராஜிம் முரளி புருஷோத்தமனிடம் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி அதற்கு முன்பணமாக 43 லட்ச ரூபாய் கமிஷன் தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பி முரளி புருஷோத்தமன் 43 லட்சம் ரூபாய் பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் முரளி புருஷோத்தமனுக்கு கடந்த மார்ச் மாதம் பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட ஆனந்ராஜ் கடன் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த முரளி புருஷோத்தமன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை தர முடியாது எனக் கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி புருஷோத்தமன் இது குறித்து புளியந்தோப்பு சரக துணை ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகார் திரு.வி.க நகர் குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு , திரு.வி.க நகர் குற்றப்பிரிவு போலீசார் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்ராஜ் ( வயது 42 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















