மேலும் அறிய

பெண் மீது கை வைத்த இளைஞர் !! டீ குடிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை மாதவரம் பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி தவறான சைகை காட்டி தாக்கிய நபர் கைது

பெண் தோள்பட்டையில் மீது கை வைத்த இளைஞர் !! டீ குடிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் வசித்து வரும் 31 வயது பெண் தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மாதவரம் GNT சாலையில் உள்ள டீ கடையில் டீ குடிக்க சென்ற போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெண்ணின் தோள்பட்டையில் கை வைத்துள்ளார். 

உடனே அப்பெண் நீங்கள் யார் என்று கேட்ட போது , அந்த நபர் ஆபாச சைகை செய்து அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பொன்னியம்மன்மேடு கோயில் தெருவை சேர்ந்த மோசஸ் (எ) அப்பு ( வயது 25 )  என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் மோசஸ் (எ) அப்பு மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி மோசஸ் (எ) அப்பு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேர் கைது. பெண்களை குறி வைத்து பணப் பறிப்பில் ஈடுபட்டது அம்பலம்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் இரவு நேரங்களில் பெண்களை குறி வைத்து சிலர் தொடர்ந்து பணப் பறிப்பில் ஈடுபடுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி பில்லர் அருகே சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து சோதனை செய்தனர். 

அப்பொழுது அவர்களிடம் மூன்று கத்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் ( வயது 20 ) வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 24 ) அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் ( வயது 24 ) என்பது தெரிய வந்தது. 

இவர்கள் மூன்று பேரும் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை வேளையில் அப்பகுதியில் உள்ள பெண்களை கத்தியை காட்டி மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் மேலும் கைது செய்யப்பட்ட அப்பாஸ் மொய்தீன் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் அவர் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் அறிந்து அப்பாஸ் மொய்தீன்  மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் சென்று அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அப்பாஸ் மொய்தீன்,சஞ்சய்,சரவணன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget