மேலும் அறிய

கிராமத்திலேயே எங்களை சிறைப்படுத்தி உள்ளனர்.. பரந்தூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு..

இன்று மக்களிடம் கருத்து கேட்க வந்த எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமத்தின் எல்லை பகுதிகளில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ள நிலையில், விமான நிலையம் தங்கள் கிராமப் பகுதியில் அமைவதற்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்பதற்காக பல சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கிராமத்தை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
 
கிராமத்திலேயே எங்களை சிறைப்படுத்தி உள்ளனர்.. பரந்தூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு..
இந்நிலையில் பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக  ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களுடைய போராட்டத்தை தீவர படுத்தியுள்ளதால் , கிராம சுற்றுவட்டார பகுதிகளில் புற காவல் நிலையத்தை காவல்துறையினர் நிறுவியுள்ளனர். ஏகனாபுரம், கண்ணதாங்கள், உள்ளிட்ட பகுதிகளில் புற காவல் நிலையம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம மக்களை சந்திக்க வந்த விவசாய சங்கத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 
 
கிராமத்திலேயே எங்களை சிறைப்படுத்தி உள்ளனர்.. பரந்தூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு..
இதனை அடுத்து இன்று எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கிராம பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்க வந்திருந்தனர். அப்பொழுது காவல்துறையினர் கண்ணதாங்கள் என்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயலாளர் கரீம், வர்த்தக அணி தலைவர் அன்சாரி மற்றும் மாவட்ட மாவட்ட நிர்வாகி ஜாஃபர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவரை காவல் துறை கைது செய்து சுகாசத்திரம் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 
 
கிராமத்திலேயே எங்களை சிறைப்படுத்தி உள்ளனர்.. பரந்தூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு..
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த  ஏகனாபுரம், கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் அமர்ந்து காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தங்கள் பகுதியில் அமைந்துள்ள புறநகர் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும். நாங்கள் அப்பகுதியில், சிறை வைக்கப்பட்டதாக உணர்கிறோம் எனக்கூறி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து காவல்துறை அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
காவல் சட்டம் 30  (ii)
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 30 (ii) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது.

இச்சமயங்களில் இரு பிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். M.சுதாகர் , 30 ( ii ) காவல் சட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமல்படுத்த உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  ( 24.08.22 ) முதல் 15 நாட்களுக்கு 30 ( ii ) காவல் சட்டத்தினை அமல்படுத்தியிள்ளனர். இதன்படி ஒரு கூட்டத்தைக் கூட்டவோ, பேரணி நடத்தவோ, அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிளோ மற்றும் மேற்கண்ட கூட்டத்தை கூட்ட ஊக்குவிப்பவர்கள் காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெறவேண்டும் என காவல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget