மேலும் அறிய

Omni buses: அதிக கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகள்... அதிரடியாக ரூ. 92, 500 அபராதம் விதித்த அதிகாரிகள்..!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 92, 500 அபராதம் விதிக்கப்பட்டது. 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 92, 500 அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து கோயம்பேடு,போரூர் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 49 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, 49 பேருந்துகளுக்கும் ரூ.92, 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், புகாரளித்த 9 பயணிகள் செலுத்திய அதிக கட்டணம் ரூ.9,200 பணமும் அவர்களுக்கே திரும்பப் தரப்பட்டது. 

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், “போக்குவரத்து ஆணையர், சென்னை 5 அவர்களின் உத்தரவின்படியும் சென்னை (வடக்கு) சரசு இணைப் போக்குவரத்து ஆணையர் திரு. அ. இரவிசந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின்படியும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை ஒட்டி ஆம்னி பேருந்துகளில், வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 23/12/22 முதல் 02/01/2023 வரை சென்னை வடக்கு சரக பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 23/12/2022 அன்று கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கசாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பேருந்து சோதனை செய்யப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் மற்றும் வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாதில ஆம்னி பேருந்துகள் குறித்து சோதனை செய்யப்பட்டது.

இதில் 49 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 92500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட ஆம்னி பேருந்துகளிகுந்து 9 பயணிகளுக்கு ரூ. 9200 அதிக கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

இது போன்று வரி செலுத்தப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின் படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து எகிறும் பஸ் கட்டணம்:

வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் பண்டிகை காலங்களில் சொந்து ஊர்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் பண்டிகை காலங்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  கிறிஸ்துமஸ் மட்டும்மில்லாமல், ஆங்கில புத்தாண்டு, 24ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்,  ஆம்னி பேருந்தில் கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 25-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளை குறிவைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 1-ஆம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கமாக இருப்பதை விட 2 மடங்கு உயர்ந்துள்ளது.

கட்டண உயர்வு

குறிப்பாக இன்று பார்க்கும்போது, பஸ்களின் கட்டணம் வழக்கமான நாளைவிட 2 மடங்கு அதிகமாக இருப்பதை காண முடிகிறது. உதாரணமாக, திருநெல்வேலிருந்து இருந்து சென்னைக்கு வழக்கமான நாட்களில் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் சுமார் ரூ.2,400 முதல் 2,700 வரை கட்டணம், ஆனால் ஐனவரி 1-ஆம் தேதி ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல்,   மதுரையிலிருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.700 முதல் 1,000 வழக்கமான கட்டணம், ஐனவரி 1-ஆம் தேதி ரூ.2,900 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு சுமார் ரூ.1,300 வழக்கமான கட்டணம், ஜனவரி 1 முதல் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவாக இருக்கும் பேருந்துகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆனாதால் மக்கள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்கின்றனர். இதனால், பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் கட்டணத்துக்கு இணையான வகையில் ஆம்னி  பேருந்து கட்டணம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget