மேலும் அறிய

Chennai Rain : சென்னையில் காலையிலே குளுகுளு மழை... மக்கள் மனதில் ஜில்ஜில்... இன்னும் 3 மணிநேரம் என்ஜாய்..!

சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று காலையிலேயே மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சற்றுநேரத்தில், நுங்கம்பாக்கம்,  கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், ஆலந்தூர், அசோக் நகர், எழும்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் சூறைகாற்றுடன் மழை பெய்து வருகிறது. 

அதுமட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் 3 மணிநேரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை அறிவிப்புகளை பார்க்கலாம்:

19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20.06.2023 மற்றும் 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை : 

17.06.2023 மற்றும் 18.06.2023:  தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), புலிப்பட்டி (மதுரை) தலா 2, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வால்பாறை PTO  (கோயம்புத்தூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 

17.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

17.06.2023 மற்றும் 18.06.2023: வடதமிழக கடலோரப்பகுதிகள், தென் ஆந்திர கடலோரப்`பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.06.2023 முதல் 21.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
Rasi Palan Today, Sept 13: விருச்சிகத்துக்கு புதிய நபரின் அறிமுகம் உண்டு;  துலாமுக்கு கவனம் தேவை.! உங்கள் ராசிக்கான பலன்.!
Rasi Palan: விருச்சிகத்துக்கு புதிய நபரின் அறிமுகம் உண்டு; துலாமுக்கு கவனம் தேவை.! உங்கள் ராசிக்கான பலன்.!
Nalla Neram Today Sep 13: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
பாஜக டூ அதிமுக டூ பாஜக டூ அதிமுக.. மீண்டும் அந்தர் பல்டி அடித்த மைத்ரேயன்!
பாஜக டூ அதிமுக டூ பாஜக டூ அதிமுக.. மீண்டும் அந்தர் பல்டி அடித்த மைத்ரேயன்!
PM - CJI : தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி.! உடனே சூழ்ந்த சர்ச்சை.! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்.!
தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி.! உடனே சூழ்ந்த சர்ச்சை.! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்.!
Embed widget