ஒரே ஒரு முறை சார்ஜ்... 250 கி.மீ.. சென்னைய கலக்கும் மின்சார பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம்.. முழு விவரம்
MTC E Buses: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் முதற்கட்டமாக 120 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெருநகரங்களில் காற்றுமாசை குறைக்கும் வகையில் மின்சார பேருந்துகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் 120 மின்சார பேருந்துகள் முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தது.
கொடியசைத்த துவக்கி வைப்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் முதற்கட்டமாக 120 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் ஏசி வசதியுடனும், ஏசி இல்லாமல் சாதாரண பேருந்து வசதியுடனும் இயக்கப்படுகிறது. புதியதாக இயக்கப்பட்ட இந்த மின்சார பேருந்துகள் தாழ்தள பேருந்துகளாக உருவாக்கப்பட்டுள்ளது.

5 பணிமனைகளில் இயக்கம்:
இந்த மின்சார பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி மற்றும் சென்ட்ரல் ஆகிய பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. அமைக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கட்டணம் எப்படி?
இந்த பேருந்து மின்சார பேருந்து என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு வேண்டாம். ஏனென்றால், மற்ற மாநகர பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமே இந்த பேருந்துகளிலும் வசூலிக்கப்படும். மின்சார பேருந்துகளின் தேவைகளைப் பொறுத்து புதிய வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதியதாக இயக்கப்பட உள்ள மின்சார பேருந்துகளில் சிவப்பு நிற பேருந்து ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்து ஆகும். நீல நிற மின்சார பேருந்து ஏசி வசதி இல்லாத மின்சார பேருந்து ஆகும். அடுத்தாண்டு இறுதிக்குள் மொத்தம் 1000 மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம்?
| வ,எண் | வழித்தடம் எண் | புறப்படும் இடம்- சேரும் இடன் | பேருந்துகள் எண்ணிக்கை |
| 1 | 2B (சுற்று பேருந்து) |
கவியரசு கண்ணதாசன் நகர் - கவியரசு கண்ணதாசன் நகர் வழி: சிட்கோ, மகாகவி பாரதி நகர், சத்தியமூர்த்தி நகர், சிதல், சென்ட்ரல் ரயில் நிலையம் அண்ணா சதுக்கம், கண்ணகி சிலை. அரசினர் தோட்டம் மெட்ரோ, சென்ட்ரல் ரயில் நிலையம் வியாசர் மகாகவி பாத்தி சிட்கோ |
10 |
| 2 | 18A |
பிராட்வே-கிளாம்பாக்கம் வழி சென்ட்ரல் ரயில் அரசினர் தோட்டம் மெட்ரோ, அண்ணா சாலை, டி.வி.எஸ் .எம்.எஸ் நக்குவனம் SH.B. சைதாப்பேட்டை கான்கோட் சிண்டி எம்கே என் சாலை, சென்ட் தாமஸ் மவுண்ட் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம். திரிசூலம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் மேற்கு இரும்புரியூர், பெருங்களத்தூர் வண்டலூர் கேட் வண்டலூர் |
20 |
| 3 | C33 (சுற்று பேருந்து) |
கவியரசு கண்ணதாசன் நகர் - கவியரசு கண்ணதாசன் நகர் வழி: சிட்கோ, மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, கிளைவ் பேட்க்ட்ரி. பாரிமுனை, பிராட்வே, எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் P1 புளியந்தோப் காவல் கிலையம், பெரம்பூர் மார்க்கெட், மூலக்கடை சிட்கோ |
5 |
| 4 | C64 (சுற்று பேருந்து |
கவியரசு கண்ணதாசன் நகர் - கவியரசு கண்ணதாசன் நகர் வழி: சிட்கோ,மூலக்கடை, பெரம்பூர் மார்க்கெட், ஜமலியா, Pl.புளியந்தோப்பு காவல் நிலையம், சூளை பி.ஈ, எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம்,பிராட்வே, பாரிமுனை, கிளைவ் பேட்டரி, வள்ளலார் நகர் வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர், சிட்கோ |
5 |
| 5 | 37 |
பூந்தமல்லி - வள்ளலார் நகர் வழி குமணன்சாவடி ஐயப்பன்தாங்கல், போரூர், வனசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, திரஸ்ட்புரம், கால்நடை மருத்துவமனை, ஸ்டெர்லிங் சாலை, கே.எம்.சி. மோட்சம் தியேட்டர், சூளை, ரீகல் |
10 |
| 6 | 46G |
கோயம்பேடு-மகாகவி பாரதி நகர் பே.நி வழி: அரும்பாக்கம்,டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி அண்ணா நகர் கிழக்கு கம்பர் அரங்கம், சயானி/அயனாவரம், ஜமாலியா , பெரம்பூர், வியாசர்பாடி |
10 |
| 7 | 57 |
வள்ளலார் நகர் - செங்குன்றம் வழி: வியாசர்பாடி, சர்மா நகர், மூலக்கடை, கல்பனா லாம்ப், சைக்கிள் கடை, காவாங்கரை, ஆயுர்வேதா ஆசிரமம் |
10 |
| 8 | 57 X |
வள்ளலார் நகர்-பெரியபாளையம் வழி: வியாசர்பாடி, சர்மா நகர், மூலக்கடை, கல்பனா விளக்குகள், சைக்கிள் கடை, காவாங்கரை, ஆயுர்வேதா ஆசிரமம், செங்குன்றம், பாடியநல்லூர், செமிலிவரம், சோழவரம், காரனோடை, பெரியபாளையம் ஆர்டி ஜே.என்., சக்தி விநாயகர் கோயில், பாண்டி காலனூர் சந்திப்பு, மஞ்சங்கரனை, கன்னிகைப்பெயர், தர்மபுரம் கண்டிகை, ஜெயபுரம், ஆவடி சாலை சந்திப்பு, பெரியபாளையம் |
10 |
| 9 | 164 E |
பெரம்பூர் - மணலி வழி: மணலி சேக்காடு, மாதவரம் பால் காலனி, மாதவரம் தபால் பெட்டி, மூலக்கடை, பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் பே.நி |
10 |
| 10 | 170T X | வழி: கவியரசு கண்ணதாசன் நகர், சிட்கோ, மூலக்கடை, கல்பனா லாம்பு/மாதவரம், பஸ் பே-17வது கி.மீ., மல்லிகை நகர், வாட்டர் பைப் தாதன்குப்பம், வீல்ஸ் இந்தியா சாலை சந்திப்பு, திருமங்கலம், கோயம்பேடு பன்ளி, எம்.எம்.டி.ஏ காலனி சாலை சந்திப்பு III மற்றும் IST AVE, ஜாபர்கான்பேட்டை, CIPET. சென்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், பழைய விமான நிலையம், திரிசூலம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் மேற்கு, இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர் கேட் வண்டலூர் | 20 |
| 11 | 170C | வழி: எஸ்.ஆர்.பி.காலனி, கொளத்தூர், ரெட்டேரி அம்பேத்கர் நகர், தாதன்குப்பம், வில்ஸ் இந்தியா சாலை சந்திப்பு திருமங்கலம், கோயம்பேடு சத்திரம், எம்.எம்.டி.ஏ காலனி சாலை சந்திப்பு 3வது மற்றும் பது அவென்யூ, ஜாஃபர்கான்பேட்டை, சிண்டி சிபெட் | 10 |























