மேலும் அறிய

Chennai New Commissioner: சென்னையின் புதிய காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர்ஜிவால் தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 

யார் இந்த சந்தீப்ராய்?

சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியில் 1968ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை குவைத் நாட்டில் முடித்துள்ள சந்தீப்ராய் ரத்தோர் பேரிடர் மேலாண்மையில் ஆய்வுப்பட்டம் பெற்றுள்ளார்.

1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப்ராய் தமிழக கேடராக பரமக்குடியில் ஏ.எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினார். பின்னர், நாகர்கோவில் மாவட்டத்திலும் பணியாற்றினார். பின்னர், 1996ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

துணை ஆணையர், கமிஷனர்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை ஆணையராக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் 2000ம் ஆண்டு சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் போக்குவரத்து துணை ஆணையராக இருந்தபோது போக்குவரத்து எல்.இ.டி. சிக்னலை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.

பின்னர், சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது முத்திரைத்தாள் மோசடி வழக்கு விசாரணை இவர் தலைமையில்தான் நடந்தது. பின்னர், தூத்துக்குடி எஸ்.பி.யாக பொறுப்பு வகித்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த சந்தீப்ராய் ரத்தோர் தேசிய பேரிடர் மீட்பு படை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, இவரது தலைமையிலான அணிதான் கேதர்நாத் வெள்ளம், சென்னை முகலிவாக்கம் கட்டிட விபத்து போன்றவற்றை கையாண்டது.

109வது காவல் ஆணையர்:

பின்னர், 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவராக பொறுப்பு வகித்தவர், பின்னர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னையில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்டு உருவான ஆவடி மாநகர காவல் ஆணையத்தின் முதல் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். பின்னர், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி பள்ளி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

தற்போது, சென்னையின் 109வது காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காவல்துறையின் அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காவல் ஆணையருக்கான போட்டியில் டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் ஆபாஷ்குமார் இருந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை காரணமாக டேவிட்சன் ஆசிர்வாதம் காவல் ஆணையராகும் வாய்ப்பு பறிபோனது. சந்தீப்ராயே காவல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரே காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க: Shankar Jiwal DGP: தமிழத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்: தமிழ்நாடு அரசு அதிரடி!

மேலும் படிக்க: Shankar Jiwal DGP Profile: தமிழ்நாடு டி.ஜி.பி.யான மெக்கானிக்கல் இன்ஜினியர் - யார் இந்த சங்கர்ஜிவால்?

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget