மேலும் அறிய

Chennai Metro on Covid19: யூஸ் பண்ணாத பாஸ் வெச்சிருக்கீங்களா... மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்!

கொரோனா பொதுமுடக்க காலத்தில் QR  குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் நாளை (29-06-2021) முதல் நீட்டித்து கொடுக்கப்படுகிறது.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோல் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 21-06-2021 முதல் மீண்டும் தொடங்கியது.

சென்னை மெட்ரோல் ரயில் நிறுவனம், பயண அட்டை உபயோகிக்கும் பயணிகளுக்காக கொரோனா பெருந்தொற்றால் கடைபிடிக்கப்பட்ட பொதுமுடக்க காலமான 10-05-2021 முதல் 20-06-2021 வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

எனவே, பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக்கொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Damodaran rohit: இயக்குனர் சங்கரின் மருமகன் ரோஹித் யார் தெரியுமா? நம்ம மதுரக்காரர் தானா!

முறையே, கொரோனா பொதுமுடக்க காலத்தில் QR  குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் நாளை (29-06-2021) முதல் நீட்டித்து கொடுக்கப்படுகிறது.

Chennai Metro on Covid19: யூஸ் பண்ணாத பாஸ் வெச்சிருக்கீங்களா... மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்!

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

* அனைத்து  மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

* மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை. வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியைக் கண்காணிப்பதற்காகத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளில் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளி குறித்த  'X' குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் இந்தக் குறியீடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மெட்ரோ ரயில்கள் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மற்றும் மெட்ரோல் ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் மாஸ்க் அணியாவிட்டாலோ அல்லது மாஸ்கை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

அனைத்து பயணிகளும் முகக் கவசத்தை சரியாக அணிந்துள்ளனரா என்பதை கண்காணிக்க குழுக்களையும் நியமித்துள்ளது. 21-06-2021 முதல் 27-06-2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 19 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.3800 வசூலிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணித்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mutual Funds Investment Plan: SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்தால் இவ்வளவு பயனா?

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget