Chennai Metro Rail: செம்ம ஆஃபர்! டிசம்பர் 17ம் தேதியும் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் - சென்னனை மெட்ரோ அறிவிப்பு!
புயல் காரணமாக நாளை மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் மேலும் ஒரு நாள் சலுகை வழக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail: புயல் காரணமாக நாளை மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் மேலும் ஒரு நாள் சலுகை வழக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ:
சென்னையில் உள்ள போக்குவரத்து சாதனங்களில் மிகவும் முக்கியமான இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்துள்ளது மெட்ரோ ரயில்கள். இதனால் சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை ஓரளவு தீர்வை கண்டுள்ளது. இத்தகைய மெட்ரோ ரயில்கள் சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூருக்கு ஒரு வழித்தடத்தில் இயங்குகிறது.
மற்றொரு வழித்தடமாக விமான நிலையம் தொடங்கி விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் பொதுமக்கள் தவிர்த்து வெளியூரில் இருந்து வருபவர்களும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் ஒவ்வொரு மாதமும் பயணிப்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் 80 லட்சத்து 01,210 பேர் பயணித்துள்ளனர்.
இதனிடையே பயணிகள் எண்ணிக்கையை கருத்தி கொண்டு அவர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாக முடிவு செய்தது. இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரூ. 5 ரூபாயில் பயணிக்கலாம்:
இப்படியான நிலையில் மெட்ரோ நிர்வாகம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், டிசம்பர் 3 ஆம் தேதியான நாளை ஒருநாள் மட்டும் க்யூ.ஆர். கோடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோவில் எங்கு வேண்டுமானாலும் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அடித்தள நாளை (நிறுவப்பட்ட தினம்) முன்னிட்டு இந்த சலுகையானது வழங்கப்படுகிறது.
அதேசமயம் சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சி.எம்.ஆர்.எல். மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆ.ர். ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு அறிவிப்பை சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி ஆஃபர்:
அதன்படி, வடகிழக்கு பருவமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் ரூ.5 என்ற கட்டணப் பயணத்தில் வரும் 17.12.2023 அன்றும் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03.12.2023) பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க