Chennai Metro Rail: தொடர் விடுமுறை: 6 நிமிடத்திற்கு ஒரு ரயில்..இன்றும், நாளையும் மெட்ரோ சேவை நீட்டிப்பு!
தொடர் விடுமுறை காரணமாக, இன்றும், நாளையும் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail: தொடர் விடுமுறை காரணமாக, இன்றும், நாளையும் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ:
சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.
அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்தில் 84.37 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
தொடர் விடுமுறை:
இந்நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும், நாளையும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Extension of Metro Train Services during evening peak hours on 20th and 21st October 2023#PressRelease #cmrl #chennaimetro #metrorail #Metro #Chennai #chennairail #train #Holidays pic.twitter.com/svXcLBx5eH
— Chennai Metro Rail (@cmrlofficial) October 19, 2023
6 நிமிடத்திற்கு ஒரு ரயில்:
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஞாயிற்று கிழமை (அக்டோபர் 22), ஆயுத பூஜை (அக்டோர் 23), சரஸ்வதி பூஜை (அக்டோபர் 24) என தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (அக்டோபர் 20) மற்றும் நாளை (அக்டோபர் 21) ஆகிய நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. அதாவது, இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க