சென்னையில் குறையப்போகும் டிராபிக்... 180 கோடியில் கேபிள் பாலங்கள்! எங்கிருந்து எங்கு வரை முழு விவரம்
சென்னை நகரின் மிக முக்கிய திட்டமான சென்னை மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பால பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னை நகரில் முதல்முறையாக கேபிள் பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து:
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரில் நாளுக்கு போக்குவரத்து நெரிசலான அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பட்ட மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் சொந்த வாகனங்கள்:
என்னத்தான் சென்னையில் போது போக்குவரத்தான மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அதிகளவில் இயக்கப்பட்டாலும் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாக எத்தனை மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள் மற்றும் போக்குவரத்தில் மாற்றம் செய்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் வைப்பது என்பது சவாலாகவே உள்ளது.
மதுரவாயல்-துறைமுகம் பாலம்:
சென்னை நகரின் மிக முக்கிய திட்டமான சென்னை மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பால பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 20 கீமி தூரத்திற்கு இரண்டு அடுக்கு நான்கு வழித்தட மேம்பாலம் அமைய இருக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின்
கேபிள் தாங்கி பாலங்கள்:
இந்த திட்டத்தில் மொத்தம் மூன்று இடங்களில் கேபிள் தாங்கி பாலங்கள் அமையவுள்ளது. இதில் முதல் கேபிள் தாங்கி பாலம் நேப்பியர் பாலம் அருகே அமைக்கப்பட இருக்கிறது. மற்ற இரண்டும் கோயம்பேடு மற்றும் மதுரவாயல் அருகே அமையவுள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அதிகரித்து வரும் போக் குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலங்கள், மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி கேபிள் தாங்கிய பாலங்கள் முதற்கட்டமாக கோயம்பேட்டில் ஒன்றும், மற்றொன்று மதுரவாயலிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாலமும் 300 மீட் டர் நீளமும், 75 மீட்டர் இடைவெளியில் அமைய உள்ளது. மொத்தம் ரூ.180 கோடி செலவில் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
எப்படி அமையவுள்ளது?
நேப்பியர் பாலத்திற்கு அருகில், உயரமான நடை பாதை சுவாமி சிவானந்தா சாலையில் கடக்கும் இடத்தில் ஒரே ஒரு தூண் மூலம் பாதை தீவுத்திடல் வழியாக வரும். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கோயம்பேட்டில், சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கு மேலேயும், மதுரவாயலில் தரப்பிரிப்பு பாலத்துக்கு மேலேயும் அமைய உள்ளது. இந்த பணிகள் பிப்ரவரி 2027க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. சுமார் 30 சதவீத பைலிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 4,842 பில்லர்கள் அமைய உள்ளது.
மேலும் இந்த திட்டம் நான்கு தொகுப்புகளைக் கொண்டுள்ளது. கட்டமைப்பிற்கான 9,425 எண்ணிக்கையிலான பாகங்கள் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் தொலைவில் போடப்பட உள்ளது. வழித்தடத் தின் இரண்டு அடுக்குகளில் ஒன்று ஆறு வெளியேறும் வழியும் மற்றும் ஏழுநுழைவு வழியும் கொண்டிருக்கும், மற்றொன்று சென்னை துறைமுகத்தை மதுரவாயலுடன் நேரடியாக இணைக்கும் என கூறினார்.






















