Koyambedu Market: கோயம்பேடு மார்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறதா? உண்மை நிலவரம் இதுதான்..
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கோயம்பேடு வணிக வளாகம் இட மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![Koyambedu Market: கோயம்பேடு மார்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறதா? உண்மை நிலவரம் இதுதான்.. chennai koyambedu market replace information is rumour and vegetables sellers leader denies Koyambedu Market: கோயம்பேடு மார்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறதா? உண்மை நிலவரம் இதுதான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/06/32fff244eae2660eae4178157e42a3381693994867619102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய காய்கறி சந்தையில் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் ஆகும். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கோயம்பேடு சந்தையும் உள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்:
இந்த நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து கோயம்பேடு காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்க தலைவர் ராஜசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“ கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவிலே மிகப்பெரியது ஆகும். இது கட்டப்பட்டதன் நோக்கம் நூறாண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்று சுமார் 150 ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கடைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த வணிக வளாக கடைகள் அனைத்தும் சுயநிதி திட்டத்தின் கீழ் உலக வங்கியிடம் கடன் வாங்கி அனைவராலும் முழுத்தொகையும் தவணை முறையில் சொந்த கடைகளாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். தினசரி 8 ஆயிரம் டன் உணவுப்பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தை வளர்ச்சிக்காக கடந்தாண்டு பட்ஜெட்டில் ரூபாய் 20 கோடியும், இந்தாண்டு ரூபாய் 10 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இடமாற்றமா?
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றப்போவதாக தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகளே தவிர உண்மை இல்லை, இதுதொடர்பான, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறிவிட்டனர். மார்க்கெட்டுக்குள் பழுதான சாலைகள் சீரமைக்க வேண்டும்.
குடிநீர் வசதி செய்து தருவதுடன், வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இரவில் லாரிகள் வந்து செல்வதால் கோயம்பேட்டில் லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதில்லை. பிற வாகனங்களால்தான் கோயம்பேட்டில் போக்குவரத்து குளறுபடி ஏற்படுகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு சந்தையில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்த சந்தை அமைந்துள்ளது என்பதால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்த சந்தை மிகுந்த பயனுள்ளதாக அமைந்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரெடியாகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: 45 நாட்களில் முக்கிய பணியை முடிக்க முதல்வர் உத்தரவு?
மேலும் படிக்க: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் முக்கிய ஆலோசனை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)