தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் முக்கிய ஆலோசனை!
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை தலைமைச் செயல்கத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சட்டம், ஆணைகள், அரசாணைகள், அறிவிக்கைகள், கடிதங்கள், குறிப்பாணைகள் உள்ளிட்ட அரசு வெளியிடும் அறிப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், அரசு அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துறை செயல்பாடுகள், மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலக்கிய திறனறித் தேர்வு அறிவிப்பு
இதனிடையே 2023- 2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து முதன்முதலாக 2022- 2023ஆம் கல்வியாண்டில் அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகைத் கேர்வு நடத்தப்படும்.
கருணாநிதி நூற்றாண்டு விழா - ஓவியப் போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு செப்டம்பர் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். செப்டம்பர் 9-ம் ஆம் தேதி காலை 10:30 முதல் 12:30 மணி வரை அருங்காட்சியக வளாகத்தில் ஓவியப் போட்டி நடைபெறும். 4,5 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு இயற்கை காட்சிகளுடன் தமிழ்நாடு நினைவுச் சின்னம் அல்லது அருங்காட்சியக அரும் பொருட்கள் எதாவது ஒன்றின் ஓவியம். 7,8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு நான் விரும்பும் தமிழக பெண் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லது திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) 10.11 மற்றும் 12 தமிழ்நாட்டு பண்பாட்டுடன் அருங்காட்சியகத் தொடர்பு குரல் ஓவியம் அல்லது திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) தலைப்பாக வழங்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.