(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Garbage Anthem: எனது குப்பை எனது பொறுப்பு... விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி.. வைரல் வீடியோ
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் குப்பு சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு குப்பைகள் சேகரித்து முறையாக அதை சுத்திகரிப்பது தொடர்பாக மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குப்பை சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது குப்பை சேகரிப்பு தொடர்பாக ஒரு விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பாடல் சென்னை பெருநகர மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் “நமது குப்பை நமது பொறுப்பு” என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பதிவில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குப்பை சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடுகிறார். அந்தப் பாட்டில் குப்பை சேகரிப்பு தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளன.
நமது குப்பை நமது பொறுப்பு!
— Greater Chennai Corporation (@chennaicorp) September 21, 2022
புதிய விழிப்புணர்வு பாடல். #ChennaiCorporation #NammaChennaiSingaraChennai#ThooimaiChennai @gvprakash @SumeetUrbaser @GSBediIAS @PriyarajanDMK @MMageshkumaar @rdc_south @snehadivakaran @vishu_mahajan @SivaguruIAS pic.twitter.com/Ikpp05YRY0
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை இரயில் நிலையங்களில் விற்பனை நிலையம் அமைக்க வேண்டுமா?
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 'One Station One Product' அதாவது ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டம் மத்திய ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில், விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு விற்பனையாளர்களுக்கு அழைப்பு விடுகப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 |
சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் நிலையம் |
காஞ்சிபுரம் பட்டு, ஆர்கானிக் மிக்ஸ் |
2 | திருவள்ளூர் இரயில் நிலையம் | மூலிகை நலவாழ்வு தயாரிப்புகள், பாரம்பரிய தின்பண்டம் |
3 | அம்பத்தூர் இரயில் நிலையம் | பாரம்பரிய தின்பண்டம், ஆர்கானிக் மிக்ஸ் |
4 | வேளச்சேரி இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், பாரம்பரிய தின்பண்டம் |
5 | சென்னை பூங்கா இரயில் நிலையம் | மர பொம்மைகள், கைவேலைப்பாடு ஆபரணங்கள் & கைத்தறி, பாரம்பரிய தின்பண்டம் |
6 | சென்னை கடற்கரை | பாரம்பரிய தின்பண்டம், ஆர்கானிக் மிக்ஸ் |
7 | கிண்டி இரயில் நிலையம் | தூய்மைப்படுத்தும் திரவங்கள், சணல் பைகள் |
8 | கோடம்பாக்கம் இரயில் நிலையம் | பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் பானங்கள் |
9 | கொரட்டூர் இரயில் நிலையம் | பாரம்பரிய இனிப்பு வகைகள் |
10 | குரோம்பேட்டை இரயில் நிலையம் |
ஆர்கானிக் மிக்ஸ், ஆயுர்வேத எண்ணெய், ஆடும் பொம்மைகள், |
11 | வில்லிவாக்கம் இரயில் நிலையம் |
|
12 | பரங்கி மலை இரயில் நிலையம் | ஆயுர்வேத எண்ணெய், சணல் பைகள், மர பொம்மைகள் |
13 | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் | காஞ்சிபுரம் பட்டு |
14 | சென்னை எழும்பூர் இரயில் நிலையம் |
சணல் பைகள், காஞ்சிபுரம் பட்டு |
15 | பெரம்பூர் இரயில் நிலையம் |
கைவேலைப்பாடு ஆபரணங்கள் & கைத்தறி
|
16 | ஆவடி | சணல் மற்றும் காகித தயாரிப்புகள் |
17 |
தாம்பரம் இரயில் நிலையம் |
ஹெல்த் மிக்ஸ், ஆடும் பொம்மைகள் |
18 |
சேப்பாகம் இரயில் நிலையம் |
ஆர்கானிக் மிக்ஸ், மூலிகை தயாரிப்புகள் |
19 |
நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் |
ஆயுர்வேத எண்ணெய், மர பொம்மைகள் |
20 | திருமயிலை இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், சணல் பைகள் |
21 | திருவான்மியூர் இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், அப்பளம் மற்றும் வடாம் |
22 | மாம்பலம் இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், ஆயுர்வேத எண்ணெய், மர பொம்மைகள் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரம்:
கைத்தறி வளர்ச்சி ஆணையரால் வழங்கப்பெற்ற அல்லது உரிய மாநில/மத்திய அதிகார அமைப்பினரால் வழங்கப்பெற்ற கைவினைஞர் அட்டை/நெசவாளர் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.
தனிப்பட்ட கைவினைஞர் / நெசவாளர் / கைவேலைப்பாட்டு கலைஞர் ஆகியோர் பழங்குடியினர் கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி ஃபெடரேஷன் லிமிட்டட் உடன் தேசிய கைத்தறி வளர்ச்சி கார்ப்பரேஷன் உடன் / கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றுடன் சேர்ந்து பதிவு பெற்றுள்ளவராக இருப்பது அவசியம்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தில் (PMEGP- Prime Minister's Employment Generation Programme) பதிவு பெற்றுள்ள சுய உதவிக் குழுவினராக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாதவாரக இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட இரயில் நிலையத்தின் மேலாளரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் சென்னை கோட்டத்தின் வர்த்தக வளர்ச்சி பிரிவை (Business Development Unit) தொடர்பு கொள்ள வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ. 1000/- இறுதி செய்யப்படும் தருணத்தில் அந்தந்த நிலையத்தில் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.