Chennai Food Festival : உணவு பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. சென்னைல ‘உணவுத் திருவிழா’ வரப்போகுது..எங்கே எப்போன்னு தெரியுமா?
சென்னை செம்மொழி பூங்காவில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா நடைபெற உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
Chennai Food Festival : சென்னை செம்மொழி பூங்காவில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா நடைபெற உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
உணவுத் திருவிழா
சென்னையில் ஏரளமான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான உணவு பிடிக்கும். ஒரு சிலருக்கு இந்திய உணவுகள் பிடிக்கும், மற்றவர்களுக்கு சைனீஸ், தாய் அல்லது பிற நாட்டு உணவுகள் மீது மோகம் அதிகமாக இருக்கும். சென்னையை பொருத்தவரை அனைத்து வகை உணவுகளும் கிடைக்கிறது. உணவுப்பிரியர்களும் இங்கு அதிகம் என்றே சொல்லலாம்.
இதன் காரணமாக தீவுத்திடல் போன்ற மைதானங்களில் தான் தமிழக அரசு சார்பில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் வித்தியாசமான உணவு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய உணவு திருவிழா மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
நாளை மறுநாள்
இந்நிலையில், உணவு திருவிழா பற்றி திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது, சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் செம்மொழி பூங்காவில் வரும் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த உணவு திருவிழா பங்கேற்க விரும்புவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். 9176483735 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இந்த உணவு திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம். pic.twitter.com/UrvLgB7UPM
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 22, 2023
”தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைக்கின்றோம்" என்றார்.
முன்னதாக, சென்னையில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைப்பதாகவும், சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலைவரை உள்ள 2 கி.மீ நீளச்சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.