தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
ஏற்கெனவே ஹிட் ஆன படங்களின் பெயரில் இவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன.
சிவகார்த்திகேயன் முழுமையான கதாநாயகனாக அறிமுகமான படம். 1968-ஆம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படத்தின் பெயர் எதிர்நீச்சல் தான்.
கமல்ஹாசன் நடிப்பில் 1985-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காக்கி சட்டை. அதே பெயரில் உள்ள இத்திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிந்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.
1987-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலைக்காரன். அதே பெயரின் 2017-ல் சிவகார்த்திகேயன் நடித்த படமும் வெற்றி பெற்றது.
1986-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். 2023-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் அவரின் அடுத்த கட்ட நடிப்பை வெளிப்படுத்தியது.
1992-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அவர் திரைவாழ்வின் மிக முக்கியமான படமாக அமைந்தது. கடந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் ப்ளாக்பஸ்டராக படமாக அமைந்தது.
1952-ல் சிவாஜி கணேசன் முதன்முதலில் நடித்த திரைப்படம். கருணாநிதி இப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் SK24 திரைப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுபோல சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்கள் வெற்றிபெற்ற நிலையில், இப்படமும் வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.