Chennai Corporation: 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சுற்றுலா அழைத்துச்சென்ற சென்னை மாநகராட்சி
Chennai Corporation: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேசிய கல்வி சுற்றுலாவிற்கு மாநகராட்சி அழைத்து சென்றுள்ளது.
Chennai Corporation: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேசிய கல்வி சுற்றுலாவிற்கு மாநகராட்சி அழைத்து சென்றுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 11ம் வகுப்பு பயிலும் 50 மாணவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமகா கடந்த 2 ஆண்டுகளாக அழைத்துச் செல்ல முடியாத சூழல் இருந்தது. இந்தாண்டில் தேசிய கல்விச் சுற்றுலாவிற்கு சண்டிகர், சிம்லா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சண்டிகர் விரைவு ரயில் மூலம் 40 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் என மொத்தம் 50 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி-
— Priya (@PriyarajanDMK) October 31, 2022
மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், மேலும் மேற்க்கல்வியினை தொடரவும், ஆண்டுதோறும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பாக,
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த... pic.twitter.com/U5GLGdEjuZ
சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாணவர்களுக்கு இனிப்புகள், உணவுகள், குளிர்பானங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக உதவி கல்வி அலுவலர் தலைமையில் 5 ஆசிரியர்கள் மாணவர்களுடன் செல்கின்றனர். இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச் சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சண்டிகர், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு தேசிய கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் சென்னை தொடக்கப்பள்ளிகள் 119, நடுநிலைப் பள்ளிகள் 92, உயர்நிலைப் பள்ளிகள் 38 பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என ஆக மொத்தம் 281 சென்னைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் சென்னை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 200 மழலையர் பள்ளிகளும் இயங்கி வருகின்றன என கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்கள் உள்ளன. மாணவர்களை ஊக்கப்படுத்துதல், நல்வழியில் கொண்டு சென்றுதல், அறிவாற்றலை வளர்த்தல் போன்ற சிறப்பான திட்டங்களை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னைக்குட்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேசிய கல்வி சுற்றுலாவிற்கு மாநகராட்சி அழைத்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.