மெரினாவை அழகுபடுத்தப்போறோம்... திட்டமிட்ட சென்னை மாநகராட்சி முயற்சிக்கு எழுந்த திடீர் முட்டுக்கட்டை
மெரினாவை அழகுபடுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி கொண்டுவந்த திட்டத்துக்கு திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
மெரினாவை அழகுபடுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி கொண்டுவந்த திட்டத்துக்கு திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
கடற்கரையை ஒட்டிய லூப் சாலையில் 900 ஸ்மார்ட் கடைகள் அமைப்பதென்பதுதான் திட்டம். மீன் வியாபாரிகளும் மற்றும் பிற உணவுக் கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளுக்கும் இந்த வண்டிகளைக் கொடுப்பதன் மூலம் தேவையற்ற ஆக்கிரமிப்பை அகற்றி கடற்கரையை அழகுப்படுத்தலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் இவற்றில் வெறும் 52 வண்டிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டன. எஞ்சியவை சென்னை மந்தைவெளி சென்ட்ரல் வங்கி அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சில சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் இருப்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிட்டது. மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள 900 ஸ்மார்ட் கடைகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 900 பேர் நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிர்பயா நிதி, மத்திய சுற்றுலா துறையின் சுவதேஷ் தர்ஷன் திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளை அழகுபடுத்த நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கடற்கரையில் நடைபாதை, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, ஜாக்கிங் டிராக், உட்காரும் மேடை, கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை ஆகியனவற்றை அமைக்க திட்டமிடப்பட்டது.
2019-ஆம் ஆண்டில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் 6 மாதங்களுக்குள் மெரினாவை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் உத்தரவிடப்பட்டது. 2020ல் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டது. இந்த ஆண்டு லூப் சாலையை சுத்தப்படுத்துவதில் மிக சிறிய அளவிலேயே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 900 வண்டிகளை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது குறித்து தென்னிந்திய மீனவர்கள் சங்கத்தலைவர், கே.பாரதி கூறும்போது, மெரினாவில் 8 மீனவர் குப்பம் உள்ளது. நொச்சிக்குப்பத்தில் 298 கடைகள் உள்ளன. இந்தப் பகுதிதான் அவர்களின் வாழ்வாதாரம். இந்தப் பகுதியை காலி செய்து அவர்களை வேறு இடத்தில் குடியமர்ந்த்துவது என்பது மோசமான முடிவாகும் என்று கூறினார். இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, மெரினாவை அழகுபடுத்தும் உத்தரவுகள் அனைத்தையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் மெரினாவை அழகுப்படுத்தும் முயற்சியை நீதிமன்ற உத்தரவுகளைப் பொறுத்தே மேற்கொள்ள வேண்டும் என்றார்.