Train Cancel: பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7:00 மணி முதல் இரவு 8 மணி வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, அதேபோன்று இதற்கு மறு மார்க்கமாக இயக்கக்கூடிய செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் சேவைகள் சென்னையில் மிகப் பிரதான ரயில் சேவையாக உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என பல தரப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடிய ரயில் சேவையாக உள்ளது.
அதேபோன்று திருவள்ளூர் - சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய ரயில் சேவைகளும் மிக முக்கிய ரயில் சேவைகளில் ஒன்றாக உள்ளது. குறைந்த விலையில் பயணம் செய்யலாம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக இந்த ரயில் சேவைகள் உள்ளன. அவ்வப்போது இந்த ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக, ரத்து செய்யப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
நாளை ரயில்கள் ரத்து
சென்னை எழும்பூரிலிருந்து, விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் யார்டில் நடைபெற்று, வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் இயங்கக்கூடிய ரயில்கள் நாளை ( 22- 09-2024) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 13 மணி நேரத்திற்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் -அரக்கோணம் மற்றும் திரும்பிச் செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் நாளைய அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள்
ரயில்கள் ரத்து செய்யப்படுவதை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையும் அதேபோன்று, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் குறித்து, அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு மாநகர பேருந்துகள்
இதேபோன்று மாநகர பேருந்துகளும் நாளை கூடுதலாக இயக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரயில்கள் ரத்தான பொழுது மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.