மேலும் அறிய
Chennai Airport : விமான நிலையத்தில் பரபர சூழல்.. குடும்பத்துடன் போலி பாஸ்போர்ட்டில் பயணம்.. சென்னையில் 4 பேர் கைது..
"இவர்கள் அனைவருக்கும் இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இருப்பதோடு, இவர்கள் 2011-ஆம் ஆண்டில் இருந்து, சென்னை வண்டலூர் அருகே வசிக்கின்றனர் "
இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில், கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் போலி பாஸ்போர்ட்டில், இலங்கையிலிருந்து சென்னை வந்ததாக கூறி, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கணவன் மனைவி உள்ளிட்ட நான்கு பேரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பு நகரில் இருந்து, பிட்ஸ் ஏர் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர்.
குடியுரிமை அதிகாரிகள் விசாரணை :
அப்போது இலங்கையின் கொழும்பு நகரை சேர்ந்த ரமலான் சலாம் (33), அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர், இந்த விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவர்கள் பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்தனர். இந்திய பாஸ்போர்ட்டை ரமலான் சலாமும், அவருடைய குடும்பத்தினரும் வைத்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த இவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்கள் எவ்வாறு வந்தது என்று குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.
வண்டலூர் அருகே...
அப்போது ரமலான் சலாம், கடந்த 2011 ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து, அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், அதன்பின்பு இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை வண்டலூர் அருகே தங்கியிருந்ததாகவும், அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,பேன் கார்டு போன்றவைகளை பெற்றதாகவும் கூறினார். அதோடு அவைகள் மூலமாக இந்திய பாஸ்போர்ட் தனக்கும், குடும்பத்தினருக்கும் பெற்றதாகவும் கூறினார். அதோடு முறைப்படி பாஸ்போர்ட் வாங்கும்போது, வண்டலூர் ஓட்டேரி போலீஸ் நிலைய வெரிஃபிகேஷன் நடந்து, அதன் பின்புதான், தங்கள் குடும்பத்தினருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
" நீங்கள் இலங்கை பிரஜைகள்தான் "
ஆனால் குடியுரிமை அதிகாரிகள், ரமலான் சலாம் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் இந்தியாவில் தற்போது வசித்து வந்தாலும், நீங்கள் இலங்கை பிரஜைகள்தான். எனவே இந்திய அரசை ஏமாற்றி, இந்திய பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதோடு சலாம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை வெளியில் விடாமல், குடியுரிமை அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவர்களுடைய உயர் அதிகாரிகளிடமும், டெல்லியில் உள்ள தலைமை குடியுரிமை அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றோடும், ஆலோசனை நடத்தினர்.
"4 பேர் கைது"
அதன் பின்பு நேற்று வியாழக்கிழமை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர், சென்னை விமான நிலையம் வந்து விசாரணை நடத்தினர். அதோடு ரமலான் சலாம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம், போலியான இந்திய பாஸ்போர்ட் வாங்கி, அதன் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குடும்பமாக பயணித்து வந்ததாக குற்றம்சாட்டி, 4 பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களை மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்ற பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion