மேலும் அறிய

விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்வு..!

சென்னை விமான நிலையத்தில், பண்டிகை கால விடுமுறை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு, இதை அடுத்து விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதோடு, பயணிகள் விமான கட்டணம் பல மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெருமளவு குறைந்து, தமிழகம் முழுவதும் சகஜ நிலை மீண்டும் திரும்பி விட்டதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடுவதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, வெளியூர் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். 
 
கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வரும் 24 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற ஜனவரி முதல் தேதி புத்தாண்டு தினம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டமும் இருப்பதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றன. இதனால் ரயில்கள், பஸ்களில்  ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. 

விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..கட்டணம்  ராக்கெட் வேகத்தில் உயர்வு..!
 
இதை அடுத்து  வெளியூர் செல்லும் பயணிகள் விமான நிலையத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவந்தபுரம் ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு சபரிமலை பக்தர்கள் கூட்டமும் அலை மோதுவதால் கொச்சி, திருவனந்தபுரம் விமானங்களிலும், வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கிறது. 

விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..கட்டணம்  ராக்கெட் வேகத்தில் உயர்வு..!
 
இதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு 10-12 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது 14 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தூத்துக்குடிக்கு வருகை புறப்பாடு 6 ஆக இருந்த விமானங்கள் 8 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கோவைக்கு வருகை புறப்பாடு  10 விமானங்களாக இருந்தது, தற்போது 16 விமானங்களாக அதிகரித்துள்ளது. திருச்சிக்கு 6 விமானங்களில் இருந்து 8  விமானங்களாகியுள்ளன. கொச்சி 10  விமானங்களாக இருந்தது, தற்போது 12 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை போல் திருவனந்தபுரத்திற்கு வருகை புறப்பாடு 4 விமானங்களாக இருந்தது, தற்போது 6  விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதை போல் விமானங்களின் எண்ணிக்கை  அதிகரித்தாலும், அனைத்து விமானங்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 

விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..கட்டணம்  ராக்கெட் வேகத்தில் உயர்வு..!
 
இதை அடுத்து விமான பயண டிக்கெட் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. தூத்துக்குடிக்கு வழக்கமாக 5,300 ரூபாய். தற்போது ரூ.13,000-ரூ.14,500 வரை. மதுரைக்கு ரூ.3,600 டிக்கெட், ரூ.12000-ரூ.14,000  வரை. கோவைக்கு ரூ.3,500 டிக்கெட், தற்போது ரூ.8,000-ரூ.13,500 வரை,திருச்சிக்கு ரூ.3,500 டிக்கெட், தற்போது ரூ.6,500-ரூ.10,000 வரை. கொச்சிக்கு ரூ.3,500 டிக்கெட், தற்போது ரூ.10,000-ரூ.19,500 வரை. திருவனந்தபுரத்திற்கு ரூ.5,150 டிக்கெட், தற்போது ரூ.12,000-ரூ.21,000 வரையிலும் அதிகரித்துள்ளன. டிக்கெட் விலைகள் ராக்கெட் போல் உயர்ந்தாலும், சொந்த ஊர்களில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து, விமானங்களில் பயணிக்கின்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget