Accident: விபத்தை வேடிக்கை பார்த்தவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு...! சென்னையில் சோகம்...
Chennai Accident : சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் பலியானார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற மின்வாரிய ஊழியரும், லாரியில் மோதி உயிரிழந்துள்ளார்.
Chennai Accident : சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் பலியானார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற மின்வாரிய ஊழியரும், லாரியில் மோதி உயிரிழந்துள்ளார்.
விபத்து:
சென்னை அம்பத்தூர் அடுத்த ஓரகடம், காந்தியர் பகுதியைச் சேர்ந்தவர் யோவான்(52). இவர் தாம்பரம் மாநகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலை போரூர் ஏறி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த யோவான், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, யோவான் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேடிக்கை பார்த்தவர் பலி
அப்போது தாம்பரம் அடுத்த படப்பை சக்தி நகரை சேர்ந்த தங்கராஜ் 58. இவர் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது யோவான் பலியான இடத்தில் அதிகளவில் போலீசார் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். இதை வேடிக்கை பார்த்தப்படியே தங்கராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் படுகாயமடைந்த அவரும் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பலியான தங்கராஜ் சென்னை கெல்லிசில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், யோவான் உடலுடன், சாலையின் எதிர்திசையில் இறந்துபோன தங்கராஜ் உடலையும் சேர்த்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து:
பலியான சென்னை கெல்லிசில் உள்ள தங்கராஜ். மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிந்தது. அதேபோல் அரக்கோணம், நடு தெருவை சேர்ந்த பிரதீப் (22). இவர், போரூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை உள்ள முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போரூர் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரதீப், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க