மேலும் அறிய

Chennai AC Train: சென்னையை கலக்கப்போகும் ஏசி ரயில்..டிரைவருடன் பேசலாம்.. மேலும் சிறப்பம்சங்கள் என்னென்ன இருக்கு?

Chennai ICF AC Train: சென்னைக்கு ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Chennai Suburban AC Train: சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை வரும் மார்ச் மாதத்தில் இருந்து, குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை மின்சார ரயில்கள் - Chennai Electric Train 

சென்னை புறநகர் மற்றும் சென்னை மையப் பகுதியை இணைக்கக்கூடிய முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய, மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

வளர்ந்து வரும் சென்னை மற்றும் சென்னை புறநகரை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. அதே போன்று எப்போதுமே இந்த தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த தடத்தில், ஏசி ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

சென்னையில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் - Chennai Local AC Train 

சென்னை ஐ.சி.எப். ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.

சென்னை ஏசி ரயில் சிறப்பம்சங்கள் என்ன ?

12 பெட்டிகளை கொண்ட இந்த குளிர்சாதன வசதி கொண்ட ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரெயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது. அதேபோன்று தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. ஏசி ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும். 

இதேபோன்று ரயில் பயணத்தின் போது குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது :

குளிர்சாதன வசதி கொண்ட, மின்சார ரயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை ரயில் கோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் சோதனை ஓட்டமும், நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில்கள் எந்த நேரங்களில் இயக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோடை காலம் வர உள்ளதால் மார்ச் மாதத்திலிருந்து, இந்த ரயில்களை இயக்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கட்டண விவரம் என்ன ?

மேற்கு ரெயில்வே சார்பில் பயன்பாட்டில் உள்ள, குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களுக்கு 9 கிலோமீட்டர் தூரத்துக்கு 35 ரூபாய், 15 கிலோமீட்டர் தூரத்திற்கு 50 ரூபாய், 24 கிலோமீட்டர் தூரத்திற்கு 70 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தெற்கு ரயில்வே இவ்வளவு அதிகமான கட்டணத்தை நிர்ணிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த கட்டணத்தை வைத்து பார்த்தால் சென்னையில் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை பயணிக்க 90 ரூபாய் வரை வசூலிக்க வேண்டியது இருக்கும். எனவே கட்டண விவரம் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கட்டண விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Chennai Peripheral Ring Road: 120 கி.மீ., ஸ்பீட்.. இனி டிராபிக் இல்லை.. பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டம்.. !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
Embed widget