Crime: காதலிக்க மறுத்த பெண்ணை பாட்டிலால் கிழித்த ஃபேஸ்புக் நண்பர்! - முகத்தில் 25 தையல்கள்! சென்னையில் பயங்கரம்!
காதலிக்க மறுத்த விமான பணிப்பெண்ணின் முகத்தை மது பாட்டிலால் இளைஞர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுத்த விமான பணிப்பெண்ணின் முகத்தை மது பாட்டிலால் இளைஞர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான சோனு ஜோசப். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில், சோனு ஜோசப் இரவு பணி முடித்துவிட்டு கீழ்பாக்கம் அபுபேலஸ் ஹோட்டலுக்கு பின்னாடி உள்ள தனது விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அப்பெண்ணிடம் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞர் தான் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து சோனுவின் முகத்தை கிழித்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்துள்ளார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனுவை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் அந்த பெண்ணின் முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தாக்குதல் நடத்திய நபர் வேப்பேரியை சேர்ந்த நவீன் என்றும், இவர் சோனுவின் பேஸ்புக் நண்பர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, நவீனை பிடித்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆறு மாதத்திற்கு முன்பு பேஸ்புக் மூலம் சோனு, நவீனிற்கு நண்பராக அறிமுகமாகியுள்ளார். அப்போது நவீன், சோனுவிடன் தான் கடற்படையில் பணிபுரிவதாக கூறி பழகியுள்ளார். இந்தநிலையில், மூன்று மாதத்திற்கு முன்பு விமாப்பணிப்பெண் பயிற்சிக்காக சோனு சென்னை வந்துள்ளார். அப்போது நேரில் இருவரும் பார்த்து, அவ்வபோது வெளியே சுற்றி வந்துள்ளனர்.
தொடர்ந்து, நவீன் கடற்படை வீரர் இல்லை என்றும், சாதாரண ஒப்பந்த ஊழியர் என்றும் சோனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சோனு தனது பழக்கத்தை குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த நவீன் தொடர்ந்து சோனுவை காதலிப்பதாக தெரிவித்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த சூழலில், சோனு வேறு நபரிடம் நெருங்கி பழகுவதை நண்பர்கள் மூலமாக நவீனுக்கு தெரியவர, இதனால் ஆத்திரமடைந்த அவர் சோனுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பணி முடிந்த விடுதிக்கு திரும்பிய சோனுவை வழிமறித்து தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கு சோனு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் இருந்த நவீன், திட்டமிட்டபடி மதுபாட்டிலை உடைத்து சரமாரியாக முகத்தை கிழித்துள்ளார்.
மேலும், நவீன் கொடுத்த வாக்குமூலத்தில், “விமான பணிப்பெண்ணாக வேலை கிடைக்க போகும் திமிரில் தன்னை கழற்றி விட்டாள். அதனால் அவருக்கு அந்த வேலை கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் அழகான முகத்தை சிதைத்தேன்”என தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
குற்ற வகைகள் |
2019-ல் பதிவானவை | 2020-ல் பதிவானவை | 2021-ல் பதிவானவை |
பாலியல் பலாத்காரம் | 370 |
404 | 442 |
வரதட்சணை மரணம் | 28 | 40 | 27 |
கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமை |
781 | 689 | 875 |
மானபங்கம் | 803 | 892 | 1077 |
மொத்த குற்றங்கள் | 1982 | 2025 | 2421 |
எனினும் 2021 ஆம் ஆண்டிற்கான தரவு தற்காலிக எண்ணிக்கை மட்டுமே. தமிழ்நாட்டில் குற்றத்திற்கான தரவு வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள குற்ற வழக்குகளும் உயர்வு
இணையதள குற்ற வழக்குகள் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன. 2011-ல் இணையதள குற்றப் புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021ல் 13,077 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழகக் காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.