மேலும் அறிய

சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845.83 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

போதை பொருட்கள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845.83 கிலோ கஞ்சா மற்றும் கெட்டமைன் போதைப்பொருட்கள் நீதிமன்ற ஆணையின்பேரில், எரித்து அழிக்கப்பட்டன.

போதை பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட பொருட்களை வைப்பதற்கான இடவசதி கருதியும், வழக்கு தொடர்புடைய போதை பொருட்களை உரிய முறைப்படி அழிக்க குழுக்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், போதைப்பொருள் பழக்கத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வடக்கு மண்டல இணை ஆணையாளர்  ரம்யாபாரதி தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் G.நாகஜோதி மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் விசாலாட்சி ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழுவினை அமைத்தார்.

சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845.83 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

இக்குழுவினர் போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள் (Samples), புகைப்படங்கள் (Photos) எடுக்கப்பட்ட பின்னர் நிலுவையிலுள்ள 30 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 811 கிலோ 650 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 14 கிலோ 830 கிராம் கெட்டமைன் போதை பொருட்கள் என மொத்தம் 826 கிலோ 480 கிராம் போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது.

சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845.83 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

மேலும், போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து மேல்முறையீட்டு காலம் முடிந்த 27 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 19.360 கிலோ கஞ்சா போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது. அதன்பேரில், இன்று (08.10.2022) காலை, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆபத்தான இரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  முன்னிலையில், நீதிமன்றங்களின் ஆணைகளின் படி மொத்தம் 57 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 831 கிலோ கஞ்சா மற்றும் 14.83 கிலோ கெட்டமைன் போதைப் பொருள் என மொத்தம் 845.83 கிலோ போதைப்பொருட்கள், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.

சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845.83 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு
கடந்த 25.06.2022 அன்று 68 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் ஆகிய போதை பொருட்கள் நீதிமன்றங்கள் ஆணைப்படி உத்தரவுப்பெற்று காவல் ஆணையாளர்  முன்னிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில்: தங்க அங்கி ஊர்வலம் எப்போது? மண்டல பூஜை குறித்த முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில்: தங்க அங்கி ஊர்வலம் எப்போது? மண்டல பூஜை குறித்த முக்கிய அறிவிப்பு!
Embed widget