மேலும் அறிய
Advertisement
சென்னையில் ஜென்கர் டைவர்டிகுலம் பிரச்னைக்கு 73 வயது பெண்மணிக்கு புதிய முறை சிகிச்சை
சென்னை தனியார் மருத்துவமனையில், ஜென்கர் டைவர்டிகுலம் பிரச்னைக்கு 73 வயது பெண்மணிக்கு புதிய முறை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
சென்னை தனியார் மருத்துவமனையில் 73 வயது பெண்மணிக்கு ஜென்கரின் டைவெர்டிகுலம் பிரச்னைக்கு Z-POEM முறையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக, இரண்டு ஆண்டுகள் ஃபுட் போலஸ் இம்பாக்சன் என்ற பாதிப்பில் இருந்து வந்தார். கடந்த 6 மாதங்களாக நிலைமை மோசமடைந்த நிலையில் விழுங்குவதில் சிரமம், நெஞ்சு எரிச்சல், குமட்டல் ஆகியவை ஏற்பட்டது.
இதுகுறித்து குளோபல் ஹெல்த் சிட்டியின் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி மற்றும் தெராபிடிக் என்டாஸ்கோப்பி துறையின் தலைவர் முதுநிலை ஆலோசகர் டாக்டர் பி.மகாதேவன் கூறியதாவது: குரல்வளை மற்றும் உணவுக்குழாய் சந்திப்பில் ஒரு பை உருவாகும் நிலையில், ஜென்கர் டைவர்டிகுலம் என அழைக்கப்படுகிறது. இந்த நோயை முழுமையாக ஆய்வு செய்து Z-POEM எனப்படும் எண்டோஸ்கோப்பி முறையில் ஜென்கர் டைவர்டிகுலம் சிகிச்சை தரப்பட்டது. தற்போது 48 மணி நேரங்களுக்குப் பிறகு திரவ உணவை உட்கொள்கிறார். தற்போது அவர் குணமடைந்து, நோய் அறிகுறி இல்லாதவராக உள்ளார் என்றார். ஜென்கர் டைவர்டிகுலம் அரிதானது. நடுத்தர மற்றும் மூத்த வயதுடையவர்களுக்கு ஏற்படுகிறது. இது நடுத்தர, வயதானவர்களுக்கு 0.01 மற்றும் 0.11 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து மேலும் டாக்டர் மகாதேவன் கூறுகையில், “உணவு உட்கொள்வதில் ஏற்படும் பாதிப்பானது நாள்பட்ட இருமல், குமட்டல் ஆகியவை ஏற்படுகிறது. இது அவரது சராசரி வாழ்க்கையை பாதித்தது. விரிவாக ஆய்வுக்குப் பின்னர் Z- POEM முறையில் ஜென்கர் டைவர்டிகுலம் பாதிப்பை சரி செய்ய முடிவெடுத்தோம். தசை மற்றும் சளி சவ்வு இடையில் செயற்கை பாதையை உருவாக்கப்பட்டது. இந்த இடம் எண்டாஸ்கோப்பி செய்ய முடியாத அளவுக்கு குறுகலாக இருந்தது. ஜென்கர் டைவர்டிகுலம் பிரச்னைக்கு பெரோரல் எண்டாஸ்கோப்பி மயோட்டமி (Z-POEM) முறை என்பது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விழுங்குதலில் உள்ள கோளாறுக்கு சிகிச்சை அளிக்க முடியும். சளி சவ்வு பாதை உருவாக்கியதன் மூலம் செப்டம் பிரிவை முழுமையாக தெளிவாக பார்க்க முடிந்தது. முறையில் சிகிச்சையை சிரமம் இல்லாமல் மேற்கொள்ள முடிந்தது. இந்த முறையின் மூலம் வயதானவர்கள், சிக்கலான நோயாளிகளுக்கு செய்ய முடியும். இதன் மூலம் குறைந்த அளவு நோய்த் தொற்றும், சிகிச்சைக்குப் பிந்தைய நிலையில் முழுமையாக குணமடையலாம்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து டாக்டர் அலோக் குல்லர் கூறியது, ஜென்கர் டைவர்டிகுலம் அறுவை சிகிச்சை முடிந்த 73 வயது பெண் நலமாக உள்ளார். எங்கள் மருத்துவமனை நிபுணர்கள் தனித்த மாற்று சிகிச்சை நடைமுறையில், முறையைப் பயன்படுத்தி ஜென்கர் டைவர்டிகுலத்துக்கு சிகிச்சை அளித்தனர். இதுபோன்ற அரிதான நோய்க்கு டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை மூலம் குணம் அடைய செய்துள்ளனர். தற்போது பெண் நோயாளி சராசரி வாழ்க்கை வாழும் சூழலை டாக்டர்கள் செய்துள்ளனர். இதுபோன்ற சிகிச்சை முறைகள் வரும் காலங்களில் அனைவருக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion