![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chengalpattu Local Train: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில் சேவையில் திடீர் மாற்றம்!
Chengalpattu to Chennai Beach Train: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கும் ரயில் சேவை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது
![Chengalpattu Local Train: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில் சேவையில் திடீர் மாற்றம்! chengalpattu to chennai beach train cancelled today tnn Chengalpattu Local Train: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில் சேவையில் திடீர் மாற்றம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/166547088c65d58d12d4e48fd6ed76901692261831063113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரயில் நிலையம் மேம்பாட்டு பணிக்காக, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் ஒரு சில ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படுகிறது
பராமரிப்பு பணி
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் இருந்து நாள்தோறும் 25 -கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள். அதேபோன்று வார இறுதி நாட்களில் சென்னைக்கு,பொருட்கள் வாங்க செல்பவர்களும் பெரும்பாலானோர் மின்சார ரயில் நிலையத்தில் பயன்படுத்துவார்கள். பேருந்து பயணத்தை காட்டிலும் மின்சார ரயில் பயணம் செய்வது மிகவும் குறைந்த விலை என்பதால் நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் மின்சார வாரியங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சார ரயில்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பராமரிப்பு பணிக்காக செயல்படாமல் போனாலும் பொதுமக்கள் அவதி அடைவார்.
பராமரிப்பு பணிகள் ( chennai beach to chengalpattu train cancel )
பொதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது முடிந்த அளவிற்கு மின்சார ரயில்கள் பாதிப்படையாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிடும். அப்படி ஒரு சில சமயங்களில் முறையாக, தவிர்க்க முடியாத காரணத்தினால் ரயில்கள் வந்து செய்யப்படும் அல்லது தாமதம் முன்னேற்றத்தை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு பணிமனை மேம்பாட்டு பணி ( chengalpattu train cancelled )
சென்னை - எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு பணிமனையில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று இரவு முதல் அதிகாலை வரை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டு வந்த ஒரு சில ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என சென்னை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ரயில் சேவையில் மாற்றம் என்னென்ன ?
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் : சென்னை எழும்பூர் மார்க்கத்தில் செங்கல்பட்டு பணிமனை மேம்பாட்டு பணிகள் இன்று இரவு முதல் அதிகாலை வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒரு சில ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
- சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இன்று இரவு 8:35 மணிக்கு இயங்கும் ரயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படாமல் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
- செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து புறப்படாமல் சிங்கப்பெருமாள் கோவில் நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.
- சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10:05 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை இயக்கப்படாமல் சிங்கப்பெருமாள் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)