PG-க்களை மிஞ்சும் தோழி விடுதிகள்.. குறைந்த விலையில் Wifi முதல் பொழுதுபோக்கு வரை.. அப்ளை செய்வது எப்படி ?
Thozhi Hostel : "தோழி விடுதிகள் பெண்கள் பாதுகாப்புடன் தங்கக்கூடிய மற்றும் குறைந்த செலவில் அமைக்கப்பட்டுள்ளது"

தமிழக அரசு பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை, அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக தோழி விடுதி இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள், பயனடைந்து வருகின்றனர். தோழி விடுதிகளை கூடுதலாக திறக்க வேண்டும் என்பது வேலைக்கு செல்லும் பெண்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தோழி விடுதி திறக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தோழி விடுதி
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : பணித்திறனில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில், குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் இருப்பது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.
புதிய தோழி விடுதிகளை திறந்து வைக்கும் தமிழக முதலமைச்சர்
இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்" என்ற அமைப்பை அமைத்துள்ளது.
அமைவிடம் எங்கே ?
இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் எண்.07. கிண்டி பூந்தமல்லி ரோடு, செயிண்ட் தாமஸ் மலை, செங்கல்பட்டு மாவட்டம்- 600089 என்ற முகவரியில் புதியதாக தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டு 21.05.2025 அன்று காலை 10.45 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக துவக்கி வைக்கப்பட உள்ளது.
வசதிகள் என்னென்ன ? Key Features Of Thozhi Hostel
இவ்விடுதி 144 படுக்கை வசதியுடன் இருவர்/ நால்வர் தங்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24/7 பாதுகாப்பு வசதி, இலவச WIFI, பயோமெட்ரிக், பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் www.tnwwhcl.in என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத் தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யார் யார் இந்த தோழி விடுதியில் தங்கலாம் ?
இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள். மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள். ஓரிரு நாட்களிலும் மகளிர் இவ்விடுதிகளில் தங்கிட வசதி செய்யப்பட்டுள்ளது.






















