மேலும் அறிய
Advertisement
Chengalpattu: நகராட்சி ஆய்வுக்கூடத்தில் கொடூரமாக உயிரிழந்த நாய்கள்..! அதிர்ச்சி தரும் என்.ஜி.ஓ. பின்னணி...!
விசாரனை அறிக்கையில் Animal Trust of India (NGO) எனும் தன்னார்வ நிறுவனம் இந்திய விலங்கு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கிவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக , நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு திருப்பி விடப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில், நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து, சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவத் துவங்கியது. அந்த வீடியோவில் சுமார் 5 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதறும் வகையில் இருந்தது.
]
இதனை தொடர்ந்து, இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. சமூக வலைதளத்தை பரவிய வீடியோவில் காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஆய்வு மேற்கொன்டு, முதல்கட்ட விசாரனை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவர் நடத்திய விசாரணை அறிக்கையில், Animal Trust of India (NGO) எனும் தன்னார்வ நிறுவனம் இந்திய விலங்கு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கிவந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் , தன்னார்வ நிறுவனம் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமலும், விதிமுறைகளுக்கு முரணாகவும் இயங்கி வந்துள்ளது என தெரியவருகிறது. எனவே விலங்குள் கொடுமை தடுப்புச் சட்டம் ,1960 பிரிவு 11 (a) ன்படி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 428 & 429 ன்படி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் , தன்னார்வ நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தன்னார்வ நிறுவனத்தின் பணிகளை செங்கல்பட்டு நகராட்சி நகர் நல அலுவலர் முத்து மேற்பார்வை செய்ய தவறியதனால் அவர் மீதும், மற்றும் செங்கல்பட்டு நகராட்சி துய்மை ஆய்வாளர் பால் டேவிஸ் ஆய்வுபணி மேற்கொள்ளாததால், அவர் மீதும் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தசம்பவம் தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்டம் விசாரணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பதிவே செய்யப்படாத, தன்னார்வலர் அமைப்பு எப்படி செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ஆய்வுக்கூடத்தில்? எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? அவர்களுக்கு எவ்வாறு அனுமதிக்க வழங்கப்பட்டது? என்பது குறித்து சர்ச்சை வடித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion