மேலும் அறிய
Advertisement
அமைச்சரின் திடீர் விசிட்.. கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவர்களின் அலட்சியம்.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை..
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் முறையாக பணிக்கு வராதது தெரியவந்தது. குறிப்பாக ஒருசில மருத்துவர்கள் கையொப்பமிட்டு பணிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது பணிக்கு வராத 4 மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார். மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட இணை இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று ஒருநாள் பயணமாக திருவண்ணாமலை சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளின் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்துவைக்க உள்ளார். உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 மருத்துவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமலிருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் தற்போது பணியிடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்து மக்கள் நல்வாழ்த்து துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைமுறைகளை கேட்டறிந்தார். மேலும், சித்தா பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆய்வின்போது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்த 4 மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை (17b) எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு, நலப்பணிகள் இணை இயக்குநரை வேறு மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion