மேலும் அறிய

உயிருக்கு போராடிய சிறுவன்.. தரமான சிகிச்சையால் காப்பாற்றிய அரசு மருத்துவமனை.. கண்ணீர் மல்க தந்தை நன்றி

எக்கோ பரிசோதனையில், இருதயத்தின் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதும் மற்றும் இருதயத்தின் இடப்பக்க வென்ட்ரிகிள் அறையில் இரத்தக்கட்டி இருப்பதும் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் , மிக முக்கிய  மருத்துவமனையாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்கி வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம், வந்தவாசி, போளூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சேட்பட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் தொடர்ந்து  பல்வேறு சாதனைகளை மருத்துவர்கள் புரிந்து வருகின்றனர்.

உயிருக்கு போராடிய  சிறுவன்.. தரமான சிகிச்சையால் காப்பாற்றிய அரசு மருத்துவமனை.. கண்ணீர் மல்க தந்தை நன்றி
 
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று,  காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் சின்ன கயப்பாக்கம் கிராமம், செய்யூர் தாலுக்காவைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவரின் 6 வயது குழந்தை ரக்க்ஷன், தேள் கடிபட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, 108 ஆம்புலன்ஸ் மூலமாக நண்பகல் 12 மணியளவில் அரசு செங்கல்பட்டு மருத்துவமனையின் குழந்தைகள் நல அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார்.  அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள்  இருதயத்தின் செயல்பாடு குறைந்து, இரத்த அழுத்தம் குறைவாகி, இரத்த ஓட்டம் சீரில்லாமல்,  மூச்சு திணறலுடன் இருப்பதை அறிந்து அதற்கான அவசரச் சிகிச்சைகளான செயற்கை சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தை  சீர்படுத்துவதற்கான மருந்துகளை ஆரம்பித்து உடனடியாக தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றினர். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயர் சிகிச்சை தொடரப்பட்டது. 
 
குறைந்த இருதய செயல்பாடு
 
மேலும் தீவிர சிகிச்சைப்பிரிவில், அவருக்கு செய்யப்பட்ட எக்கோ பரிசோதனையில், இருதயத்தின் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதும் மற்றும் இருதயத்தின்  இடப்பக்க வென்ட்ரிகிள் அறையில் இரத்தக்கட்டி இருப்பதும் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. மறுநாள் மாலை குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது.  MRI ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டு மூளையில் இரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. 
 
பல்துறை வல்லுனர்களின் ஆலோசனை
 
அரசு செங்கல்பட்டு மருத்துவமனையின் பல்துறை வல்லுனர்களின் ஆலோசனை பெறப்பட்டு அதன்படி சிகிச்சை தொடரப்பட்டது. ஆறு நாட்களுக்கு பிறகு பல சவால்களை எதிர்கொண்டு, குழந்தை வெண்டிலேட்டர் கருவியிலிருந்து படிப்படியாக வெளிக்கொண்டு வரப்பட்டார். அதன்பிறகு இரத்த உறைவுத்தன்மையை சீர்படுத்துவதற்காகவும் கண்பார்வையை மீட்பதற்கான சிகிச்சையும்  தொடரப்பட்டது. குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது.  
 
உயிருக்கு போராடிய  சிறுவன்.. தரமான சிகிச்சையால் காப்பாற்றிய அரசு மருத்துவமனை.. கண்ணீர் மல்க தந்தை நன்றி
 
மீண்டு வந்த சிறுவன்
 
பிறகு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று  பின்தொடர்  சிகிச்சைக்கான அறிவுரையுடனும், தொடர வேண்டிய  மருந்துகளுடனும் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேள்கடியால் அரிதான சிக்கல்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சையால் குணமடைந்து வருவது பெற்றோர் மற்றும் உறவினர்கள்  மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், அரசு மருத்துவர்கள் தொடர்ந்து எனது மகனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget