மேலும் அறிய
Chengalpattu GH: செங்கல்பட்டு மருத்துவமனையில் தீ விபத்து - பயத்தில் ஓடிய நோயாளிகளால் பரபரப்பு
Chengalpattu News: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

தீ விபத்து
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ( chengalpattu government hospital )
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு மதுராந்தகம், மேல்மருவத்தூர், செய்யூர், மகாபலிபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பகுதிகள் மட்டுமில்லாமல் வந்தவாசி, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் பெரிய மருத்துவமனை, பல்வேறு மருத்துவப் பிரிவுகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.

தீ விபத்து
அந்த வகையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கண் அறுவை சிகிச்சை பிரிவில் இன்று காலை திடீரென புகை வெளியாகி தீ பரவியதால் நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். ஒரு சில நோயாளிகள் மட்டுமே அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குப் விரைந்த செங்கல்பட்டு துறையினர், தீயினை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இந்த தீ விபத்து நடைபெற்றது தெரியவந்தது. காலை நேரத்தில் விபத்து நடைபெற்றதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement