மேலும் அறிய

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வைத்த கேள்வி..

ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் கார் ரேஸ் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. அங்கு நடத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறாக இந்த குறுகிய இடத்தில் நடத்துவதற்கான அவசியம் என்ன ?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து நாகர்கோயில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து நாகர் கோயில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்பாக மேடையில் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன் :

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரிய வரலாற்று புரட்சி ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையில் மட்டுமே இன்று அதிநவீன ரயில் போக்குவரத்து நாம் பார்க்க முடியும். முன்பு எல்லாம் புல்லட் ட்ரெயின் சினிமா மற்றும் பேப்பரில் மட்டும்தான் பார்ப்போம் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.. இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால்தான், இன்று சென்னைக்கும் நாகர்கோயிலுக்கும் மதுரைக்கும் பெங்களூருவுக்கும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளது, ஏற்கனவே சென்னை மைசூர் வழியே ஒரு சேவை இருக்கிறது மேலும் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் இருக்கிறது சென்னையில் இருந்து திருப்பதி வழியாக விஜயவாடாவிற்கு வந்தே பாரத் இருக்கிறது, இப்படி சென்னை மையமாக வைத்தே வந்தே பாரத் எண்ணிக்கை மிக வேகமாகவும் மாணவர்கள் மக்கள் வியாபாரிகள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக உள்ளது.

காலையில் சென்னையில் கிளம்பினால் மதியம் கோவை சென்று விடலாம் மதியம் கோவையில் இருந்து புறப்பட்டால் இரவு சென்னை வந்துவிடலாம் இப்படிப்பட்ட சிறப்பான ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சருக்கு இதற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தொடர்பாக எந்த திட்டம் போனாலும் அதற்கு உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார், கடந்த பட்ஜெட்டில் கூட 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று ரயில்வேயின் வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சி மூன்றாவது முறை பிரதமர் தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறார்கள்.. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்சியில் மும்மடங்கு தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் ரயில்வேவில் செயல்பாடாக இருக்கிறது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியதாவது ; 

தமிழகத்தில் கிராமங்களில் கூட போதைப் பொருள் புழக்கத்தில் இருந்து வருகிறது.டாஸ்மாக் மற்றும் கஞ்சா போன்ற பொருட்களினால் ஒவ்வொரு கிராமங்களில் இருப்பதிலிருந்து 30 பேர் இளம் விதவையாக இருந்து வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. போதை பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும்.

விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியது நமது பொறுப்பு கடமை ஆனால் சென்னையின் மையமான பகுதியில் நடத்த வேண்டுமா ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் கார் ரேஸ் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது அங்கு நடத்தாமல் இங்கு போக்குவரத்திற்கு இடையூறாக இந்த குறுகிய இடத்தில் நடத்துவதற்கான அவசியம் என்ன? சென்னையின் மையமான பகுதியில் கார் பந்தயம் நடக்கிறது என மையப்படுத்தி கூறுவதை தவிர்க்கவும் ஐந்தாண்டுகளில் சென்னை பெங்களூரு இணையக் கூடிய சூழ்நிலை தான் இருந்து வருகிறது எனவே சென்னையை சுருக்கி விட முடியாது. இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூரில் நடத்தி இருந்தால் அதிக அளவில் பங்கேற்று இருப்பார்கள் யாருக்கும் எந்த இடையூறும் இருந்திருக்காது.

தமிழ் ஆங்கிலம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் மத்திய அரசு கூறுகிறதே தவிர, இந்தியை புகுத்தவில்லை.தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் கற்றுக் கொடுப்பதினால் தமிழுக்கு தான் பெருமை மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசிற்கு எந்த ஒரு தடையும் கிடையாது.

நானும் SC/ST ஆணையத்தில் இருந்தேன், இது போன்ற வார்த்தைகளை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என்றும் அட்டவணை படுத்தபட்ட சமுதாயத்தை இழிவாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget