மேலும் அறிய
WATCH VIDEO: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார்: பதறி ஓடிய பொதுமக்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே திடீரென சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

தீ பற்றி எரிந்த கார்
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர், சண்முகசுந்தரம் அவரது மகன் இசக்கிமுத்து, இவர் தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி சென்று இருந்தார். இதனையடுத்து இன்று காலை திருநெல்வேலியில் இருந்து மீண்டும் சென்னைக்கு அவருடைய மைத்துனர் காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சென்னை தேசிய பிரதான நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, வாகனத்தில் திடீரென புகை வந்ததைப் பார்த்த இசக்கிமுத்து, தனது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார்.

வாகனத்தில் வந்த, புகை திடீரென்று அதிகமாக தனது தொடர்ந்து வாகனத்தில் இருந்த அனைவரும் வேகவேகமாக கீழே இறங்கினர் அந்த சமயத்தில் வாகனத்தில் திடீரென்று தீ பரவியது. இதனை எடுத்து அருகில் இருந்த ஒரு வாகனத்தில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர் இதனையடுத்து இதுதொடர்பான தகவல் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் உடனடியாக வாகனத்தில் இருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தில் இருந்த அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இசக்கிமுத்து புகை வந்தது கவனத்தை உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
மதுரை
கல்வி
Advertisement
Advertisement