New Year Wishes: திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்க வேண்டும்.. புத்தாண்டு வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
— M.K.Stalin (@mkstalin) December 31, 2022
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக!
இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!#HappyNewYear2023 pic.twitter.com/MkhXnMUEqm
புத்தாண்டு வாழ்த்தை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விடியோ பதிவாக பதிவிட்டுள்ளார். அதில் தமிழக அரசு சார்பில் நடைமுறைக்கு கொண்டு வந்த பல திட்டத்தின் பயன்களை பற்றி கூறியுள்ளார். மேலும் வரும் 2023பல்வேறு நலத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் சமூக நீதி மண்ணாக, மத சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும், வெறுப்புணர்வை தூண்டி நம்மை பிளவுப்படுத்தும் சாதிய, மதவாத சக்திகளுக்கு எப்போதும் இடம் அளிக்கக் கூடாது. மொழியால், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம் என கூறியுள்ளார்.